vivo Y35 https://www.91mobiles.com/tamil Mon, 12 Jun 2023 08:02:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 8ஜிபி ரேம் கொண்ட Vivo Y35 விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை, சலுகைகள் என்ன? https://www.91mobiles.com/tamil/vivo-y35-price-cut-rs-500-now-new-selling-price/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-y35-price-cut-rs-500-now-new-selling-price Mon, 12 Jun 2023 09:11:15 +0000 https://www.91mobiles.com/tamil/?p=8686   Vivo Y35 கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அகேட் பிளாக் மற்றும் டான் கோல்ட் ஆகிய இரண்டு வண்ண வகைகளில் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, இப்போது இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. Vivo Y35 இப்போது 17,499 ரூபாய்க்கு பதிலாக 16,359 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆம், இப்போது இந்த போனின் விலை ரூ.1,140 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஒப்பீடு 91mobiles தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. (குறிப்பு: இந்த விலை மாறக்கூடியது.)   […]

The post 8ஜிபி ரேம் கொண்ட Vivo Y35 விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை, சலுகைகள் என்ன? first appeared on .

]]>

Highlights

  • Vivo Y35 ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி நீட்டிக்கப்பட்ட ரேம் உடன் வருகிறது.
  • 44W வேகமாக சார்ஜிங் ஆதரவு போனில் வழங்கப்பட்டுள்ளது.
  •  இந்த போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது.

 

Vivo Y35 கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அகேட் பிளாக் மற்றும் டான் கோல்ட் ஆகிய இரண்டு வண்ண வகைகளில் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, இப்போது இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. Vivo Y35 இப்போது 17,499 ரூபாய்க்கு பதிலாக 16,359 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆம், இப்போது இந்த போனின் விலை ரூ.1,140 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஒப்பீடு 91mobiles தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. (குறிப்பு: இந்த விலை மாறக்கூடியது.)

 

ரூ.1,000 கேஷ்பேக்

தள்ளுபடி தவிர்த்து, ஐசிஐசிஐ, எஸ்பிஐ, கோடாக் கார்டுகளில் போனை வாங்கினால் ரூ.1,000  ‘கேஷ்பேக்’கும் வழங்கப்படுகிறது.  இந்த மொபைலின் விவரக்குறிப்புகள் பற்றிய தகவலை இப்போது பார்க்கலாம்.

Vivo Y35 இன் விவரக்குறிப்புகள்

 

டிஸ்ப்ளே

இந்த போனில் 6.58-இன்ச் FHD + 90Hz புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உள்ளது.

 

செயலி, ரேம் & சேமிப்பு

இந்த Vivo Y35 மொபைலானது ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்டோடு வருகிறது. இது 6nm சிப்செட் அடிப்படையிலானது. இந்த போன் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவுடன் வருகிறது. மேலும், சேமிப்பிற்காக 128ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

 

பேட்டரி

இந்த போன் 44W ஃபிளாஷ் சார்ஜிங்குடன் வருகிறது. இந்த போனில் பவர் பேக்கப்பிற்காக 5000mAh பேட்டரி உள்ளது. Vivo Y35 ஆனது மல்டி டர்போ மற்றும் அல்ட்ரா கேம் முறைகளுடன் அதிவேக கேமிங்கிற்காக வருகிறது.

OS

இந்த போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது. இது FunTouch OS 12 அடிப்படையிலான Android 12 இல் வேலை செய்கிறது.

 

கேமரா

Vivo Y35 ஆனது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 2MP பொக்கே மற்றும் 2MP மேக்ரோ கேமராவுடன் பெரிய சென்சார் கொண்ட 50MP பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16MP முன்பக்க கேமரா உள்ளது.

 

கனெக்டிவிட்டி

இந்த ஃபோன் 5G ஆதரவு கொண்ட ஃபோன் அல்ல. இது ஒரு 4ஜி போன் ஆகும். இது 4G VoLTE, ப்ளூடூத் 5.0, GPS/ GLONASS, USB Type-C மற்றும் Wi-Fi 802.11 ac (2.4GHz + 5Ghz) ஆகிய இணைப்பு விருப்பங்களைக் கொண்டுள்ளது.

The post 8ஜிபி ரேம் கொண்ட Vivo Y35 விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை, சலுகைகள் என்ன? first appeared on .

]]>
விவோ இயர் எண்ட் சேல்! தள்ளுபடி மற்றும் சலுகை விவரங்கள். https://www.91mobiles.com/tamil/vivo-christmas-celebration-offer-cashback-offer-announced-for-vivo/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-christmas-celebration-offer-cashback-offer-announced-for-vivo Wed, 21 Dec 2022 05:19:37 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4436 விவோ இந்தியா தனது பல்வேறு விலை பிரிவு ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்டு இறுதி சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளை டிசம்பர் 31, 2022 வரை அனைத்து வாடிக்கையாளர்களும் பெறலாம் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக Vivo V25 சீரிஸ், Vivo Y75 மற்றும் Vivo Y35 போன்களும் இந்த சலுகைகளில் அடக்கம். Vivo V25 சலுகைகள் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 […]

The post விவோ இயர் எண்ட் சேல்! தள்ளுபடி மற்றும் சலுகை விவரங்கள். first appeared on .

]]>
விவோ இந்தியா தனது பல்வேறு விலை பிரிவு ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்டு இறுதி சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளை டிசம்பர் 31, 2022 வரை அனைத்து வாடிக்கையாளர்களும் பெறலாம் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக Vivo V25 சீரிஸ், Vivo Y75 மற்றும் Vivo Y35 போன்களும் இந்த சலுகைகளில் அடக்கம்.

Vivo V25 சலுகைகள்

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஒரிஜினல் விலையாக 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.32,999 எனவும் 12 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.36,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகைகளை அடுத்து விவோ வி25 இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.27,999 க்கும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.31,999 என்ற விலைக்கும் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஒன் கார்ட், கோடக், யெஸ் பேங்க் மற்றும் பிற முன்னணி வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.2500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இஎம்ஐ சலுகைகளிலும் கேஷ்பேக்குகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த போன்களின் விலையை ரூ.25,999 மற்றும் ரூ.29,999 வரை குறைக்க முடியும்.

விவோ Y75 சலுகைகள்

Vivo Y75 இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.25,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதற்கு 19% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் ரூ.20,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ கிரெடிட்/டெபிட் கார்டுகள், எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இது தவிர ரூ17,500 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி96 எஸ்ஓசி, 6.44 அங்குல அமோலெட் டிஸ்ப்ளே, 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50 எம்பி பிரதான கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Vivo Y75 5G

இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.25,990 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதற்கு 15% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் ரூ.21,990 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதில் 50MP பிரதான சென்சார் மற்றும் இரண்டு 2MP கேமராக்களைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16MP செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Funtouch OS 12 இல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்ட்கள் பயன்படுத்தி வாங்கினால் ரூ.1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் சலுகைகள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vivo Y35

இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.22,499 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதற்கு 19% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் ரூ.18,499 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. Vivo Y35இந்த ஸ்மார்ட்போனில் 6.44 அங்குல டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 90Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. டூயல் வேரியண்ட்டில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 64 எம்பி பிரதான கேமரா, 50 எம்பி செல்ஃபி கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4,500mAh பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன்களுக்கு இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்ரேன்ஜ் விவோ ஸ்மார்ட்போன்களை வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்

The post விவோ இயர் எண்ட் சேல்! தள்ளுபடி மற்றும் சலுகை விவரங்கள். first appeared on .

]]>
இந்தியாவில் வெளியானது Vivo Y35 4G https://www.91mobiles.com/tamil/vivo-y35-4g-came-out-for-sale-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-y35-4g-came-out-for-sale-in-india Tue, 30 Aug 2022 10:41:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1909 விவோ நிறுவனத்திற்குச் சொந்தமான Vivo Y35 4G ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. 8GB RAM, Qualcomm Snapdragon 680 ப்ராஸசர், 44W பிளாஷ் சார்ஜ் வசதி, 5000mAh பேட்டரியோடு வெளியாகி இருக்கும் இந்த விவோ Y35 மொபைல் ரூ18,499 என்ற விலையில் விற்பனைக்கு வந்து இருக்கிறது. Vivo Y35 4G ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலை பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய Vivo Y35 ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் சமீபத்தில் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தியது. […]

The post இந்தியாவில் வெளியானது Vivo Y35 4G first appeared on .

]]>

விவோ நிறுவனத்திற்குச் சொந்தமான Vivo Y35 4G ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. 8GB RAM, Qualcomm Snapdragon 680 ப்ராஸசர், 44W பிளாஷ் சார்ஜ் வசதி, 5000mAh பேட்டரியோடு வெளியாகி இருக்கும் இந்த விவோ Y35 மொபைல் ரூ18,499 என்ற விலையில் விற்பனைக்கு வந்து இருக்கிறது.

Vivo Y35 4G ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலை பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய Vivo Y35 ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் சமீபத்தில் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தியது. அதனையடுத்து இப்போது, இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.

Vivo Y35 4G விலை என்ன?

Vivo Y35 4G ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் IDR 33,99,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இது ஒரே ஒரு ஒற்றை வேரியண்ட் மாடலாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மதிப்பின் படி, இது ரூ.18,499 என்ற விலையில் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. இது கோல்டு மற்றும் கருப்பு நிறத் தேர்வுகளில் வருகிறது.


Vivo Y35 4G சிறப்பம்சம்

இந்த ஸ்மார்ட்போன் 1080 × 2408 பிக்சல் உடைய 6.58 அங்குலம் கொண்ட முழு HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே பேனலில் 90Hz ரெஃபிரஷ் ரேட் வீதம் மற்றும் NTSC வண்ண வரம்பின் 96 சதவீத கவரேஜ் உள்ளது. இது Qualcomm இன் 6nm Snapdragon 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் சேமிப்புத்திறனை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 1TB ஸ்டோரேஜ் வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.

Vivo Y35 4G கேமரா மற்றும் பேட்டரி

Vivo Y35 4G சாதனம் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இது பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் உடன் இரண்டு 2 மெகாபிக்சல் பொக்கே மற்றும் மேக்ரோ சென்சார்களையும் கொண்டு இருக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக இதில் 16MP சென்சார் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் தி பாக்ஸ் அடிப்படையிலான Funtouch OS 12 இல் இயங்குகிறது. இந்த சாதனம் 44W பிளாஷ் சார்ஜ் வசதியையும் கொண்டு இருக்கிறது. கூடவே இது 5000mAh பேட்டரியோடு வெளியாகி இருக்கிறது.

The post இந்தியாவில் வெளியானது Vivo Y35 4G first appeared on .

]]>
அறிமுகமாகிறது விவோவின் பட்ஜெட் போன்! https://www.91mobiles.com/tamil/looking-for-new-mid-range-smartphone-2022-vivo-y35-launch-on-august-11/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=looking-for-new-mid-range-smartphone-2022-vivo-y35-launch-on-august-11 Wed, 10 Aug 2022 10:42:04 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1520 விவோ நிறுவனம் இந்த மாதம் பல அசத்தலான புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் விவோ வி25 ப்ரோ எனும் 5ஜி ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளது அதேபோல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி மலேசியாவில் விவோ Y35 4G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதனையடுத்து இந்த போன் இந்தியா மற்றும் பல நாடுகளில் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய விவோ போனின் அம்சங்கள் […]

The post அறிமுகமாகிறது விவோவின் பட்ஜெட் போன்! first appeared on .

]]>

விவோ நிறுவனம் இந்த மாதம் பல அசத்தலான புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் விவோ வி25 ப்ரோ எனும் 5ஜி ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளது

அதேபோல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி மலேசியாவில் விவோ Y35 4G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதனையடுத்து இந்த போன் இந்தியா மற்றும் பல நாடுகளில் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய விவோ போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

திரை

விரைவில் அறிமுகமாகும் விவோ Y35 4G ஸ்மார்ட்போன் ஆனது 6.58-அங்குல LCD டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். இந்த ஸ்மார்ட்போன் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் டிஸ்பிளேவை விட இதன் சிப்செட்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது விவோ.

சிப்செட் & இயங்குதளம்

மேலும் இந்த சிப்செட்-இன் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த விவோ Y35 4G ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரேம் & சேமிப்புத்திறன்

8GB RAM மற்றும் 128GB சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது விவோ Y35 4G ஸ்மார்ட்போன். இதன் சேமிப்புத்திறனை ஒரு Micro SD கார்டு மூலம் அதிகரித்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.

கேமரா

விவோ Y35 4G ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா (f/1.8) + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 16MP கேமராவும் இருக்கிறது.

வசதிகள்

இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கிறது. இதுதவிர இந்த போனில் கைரேகை ஸ்கேனர் வசதி கூட உள்ளது. 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஏ-ஜிபிஎஸ், சார்ஜ் செய்வதற்கான யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ Y35 4G. மேலும் இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இது தவிர, இந்த மாதம் இறுதியில் அறிமுகமாகும் விவோ வி25 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சற்று அதிக விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த விவோ வி25 ப்ரோ 5ஜி போன் ஆனது மீடியாடெக் Dimensity 1300 SoC சிப்செட் வசதியை கொண்டுள்ளது. மேலும் 6.56-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3D curved AMOLED டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 64எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்ஃபி கேமரா, 4830 எம்ஏஎச் பேட்டரி, 66W பிளாஷ் சார்ஜிங் வசதி போன்ற பல அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதேபோல் விவோ நிறுவனம் விரைவில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

The post அறிமுகமாகிறது விவோவின் பட்ஜெட் போன்! first appeared on .

]]>