Wi-Fi https://www.91mobiles.com/tamil Fri, 03 Feb 2023 14:04:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 உங்கள் Wi-Fi கனெக்‌ஷனின் வேகத்தை அதிகரிப்பது எப்படி? https://www.91mobiles.com/tamil/tips-to-improve-your-wifi-connection-speed-and-strength/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tips-to-improve-your-wifi-connection-speed-and-strength Fri, 03 Feb 2023 13:59:37 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5552 கொரோனா கால கட்டத்திற்குப் பிறகு இணையம் என்பது அனைத்து வீடுகளிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வொர்க் ப்ரம் ஹோம் (Work From Home), OTT பயன்பாடு போன்ற காரணங்களால் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதேபோல இப்போது வைஃபை ரவுட்டர் (Wi-Fi Router) சாதனங்களையும் மக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். வயர் (Wire) மூலம் இணைக்கப்படும் LAN கனெக்சனை தாண்டி, வயர்லெஸ் (Wireless) முறையில் வரும் வைஃபை இன்டர்நெட் வசதிக்கு அதிகப்படியான […]

The post உங்கள் Wi-Fi கனெக்‌ஷனின் வேகத்தை அதிகரிப்பது எப்படி? first appeared on .

]]>

கொரோனா கால கட்டத்திற்குப் பிறகு இணையம் என்பது அனைத்து வீடுகளிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வொர்க் ப்ரம் ஹோம் (Work From Home), OTT பயன்பாடு போன்ற காரணங்களால் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதேபோல இப்போது வைஃபை ரவுட்டர் (Wi-Fi Router) சாதனங்களையும் மக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

வயர் (Wire) மூலம் இணைக்கப்படும் LAN கனெக்சனை தாண்டி, வயர்லெஸ் (Wireless) முறையில் வரும் வைஃபை இன்டர்நெட் வசதிக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைப்பதற்குக் காரணம், வீட்டில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள இந்த வைஃபை சாதனங்கள் அனுமதிக்கின்றன. இந்த சவுகரியம் காரணமாகவே பலர் வயர்லெஸ் வைஃபை கனெக்ஷனை விரும்புகின்றனர்.

ஆனால், வாங்கிய புதிதில் இருக்கும் வைஃபையின் வேகம் போகப்-போக பாதிக்கப்படுவது வழக்கம். இதற்கு, முறையான பராமரிப்பு இன்மையே ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். உங்கள் வைஃபை சிறப்பான கனெக்டிவிட்டியை கொடுப்பதற்கான சில டிப்ஸ்களை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

வைஃபை இன்ஸ்டால் செய்வதில் மிகவும் முக்கியமானது சரியான இடத்தில் அதைப் பொருத்தி வைப்பது. வைஃபையானது வயர்லெஸ் கனெக்ஷன் என்பதால், சிக்னல் பயணிக்கும் வழியில் ஏதேனும் பொருள் இடையூறாக இருக்கும் பொழுது சிக்னலின் வேகம் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க, எந்த-எந்த அறைகளில் வைஃபை பயன்படுத்துவீர்களோ, அதற்கு பொதுவான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ரூட்டரை இன்ஸ்டால் செய்வது சிறப்பானது.

WiFi ரூட்டரை ஒரு சமதளமான இடத்தில், பொருட்கள் இடையூறாக இல்லாத வகையில் பொருத்தி வைப்பது அவசியம். வைஃபை இதிலிருந்து வரும் வயர்லெஸ் சிக்னல்கள் அக்கம் பக்கத்து வீட்டிலிருந்து வரும் சிக்னல்களால் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே உங்களது வைஃபையிற்கு தனியாக வயர்லெஸ் சேனலை அமைத்துக்கொள்வது நல்லது.

பொதுவாக, வைஃபையில் வரும் சிறிய ஆம்னி டைரக்சனல் (Omni-directional) ஆன்டனாக்கள் அனைத்து திசைகளிலும் சிக்னலை பரப்பும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். உங்கள் வீட்டில் அனைத்து பகுதிகளிலிருந்தும் வைஃபையை நீங்கள் பயன்படுத்துவீர்களானால், இந்த ஆம்னி டைரக்சனல் ஆன்டனாக்கள் பயன்படலாம். ஆனால் குறிப்பிட்ட இடங்களிலிருந்து மட்டும் வைஃபை நீங்கள் பயன்படுத்தினால் டைரக்ஷனல் ஆன்டனாக்களை உபயோகிப்பது நல்லது. இந்த டைரக்ஷனல் ஆன்டனாக்கள் குறிப்பிட்ட திசையை நோக்கி வைஃபை சிக்னலை ஃபோகஸ் (Focus) செய்ய உதவும். இதன் மூலம் சாதாரண ஆம்னி டைரக்ஷனல் ஆன்டனாக்களினால் கிடைக்கும் வேகத்தை விட அதிக வேகத்தில் வைஃபை கனெக்ஷன் கிடைக்கும். இவற்றை ஹை கெயின் (High gain) என்று கூறுவர்.

Wi-Fi சிக்னலை அதிகரிக்க மற்றொரு சிறந்த வழி ரிப்பீட்டரை (Repeater) பயன்படுத்துவது. இந்த ரிப்பீட்டர்கள் புதிதாக சிக்னலை உருவாக்காமல், ஏற்கனவே இருக்கும் உங்கள் வைஃபை சிக்னலை மீண்டும்-மீண்டும் வெளிப்படுத்தும். இதன் மூலம் சிக்னல் பூஸ்ட் (Boost) ஆகும். ஒரு ரிப்பீட்டரை இன்ஸ்டால் செய்வதற்கு புதிய கனெக்சன், கூடுதல் வயர்கள் தேவையில்லை. வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரிப்பீட்டர்களை வைப்பதன் மூலம் அதிவேக வைஃபை கனெக்ஷனை பெற்று சிறப்பாக பணியாற்றலாம்.

கடைசியாக உங்கள் WiFi Firmware-ஐ எப்போது அப்டேட் செய்தீர்கள்? ரூட்டர் உற்பத்தியாளர்கள் அவ்வப்போது ஃபார்ம்வேர் (Firmware) அப்டேட்களை வெளியிடுவர். அவற்றைப் பயன்படுத்தி உங்கள் ரூட்டரை அடிக்கடி அப்கிரேட் (Upgrade) செய்வது அவசியம். இவை உங்கள் வைஃபையின் சிக்னலை பூஸ்ட் செய்வது மட்டுமின்றி புதிய அம்சங்களைப் பயன்படுத்தவும் உதவும். இதற்கு தேர்ட் பார்ட்டி ஃபார்ம்வேர்களையும் (Third Party Firmware) உபயோகப்படுத்தியும் பயனடையலாம். பாதுகாப்பான ஃபார்ம்வேர்கள் இலவசமாக பிளே ஸ்டோரில் நிறைய இருக்கின்றன. அவற்றில் குறிப்பாக ஒன் ப்ராஜெக்ட் (One Project), DD-WRT ஆகியவற்றைக் கூறலாம்.

இந்த டிப்ஸ்களை பயன்படுத்தினால் உங்களால் சிறந்த வைஃபை அனுபவத்தை பெற முடியும்.

 

The post உங்கள் Wi-Fi கனெக்‌ஷனின் வேகத்தை அதிகரிப்பது எப்படி? first appeared on .

]]>