Xia omi 14 series https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 16:47:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 13 சீரிஸை விட்டுவிட்டு நேரடியால 14 சீரிஸை வெளியிட ஷாவ்மி முடிவு! https://www.91mobiles.com/tamil/xiaomi-skipped-13-series-globally-to-produce-new-xiaomi-14-series-flagship-smartphones-specification/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=xiaomi-skipped-13-series-globally-to-produce-new-xiaomi-14-series-flagship-smartphones-specification Sun, 20 Nov 2022 04:44:45 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3750 ஷாவ்மி நிறுவனம் இதுவரை தனது ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் அடுத்தடுத்த மாடல்களை, எண் வரிசையில் சரியாக ஒன்றுக்குப் பின் ஒன்றாக அறிமுகம் செய்து வந்தது. ஆனால், இந்த முறை நிறுவனம் ஒரு நம்பரை மட்டும் முழுமையாக ஸ்கிப் செய்துவிட்டது. ஷாவ்மி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த Xiaomi 12 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அடுத்தபடியாக, இந்த ஆண்டின் புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலை Xiaomi 13 என்ற பெயரில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேரடியாக […]

The post 13 சீரிஸை விட்டுவிட்டு நேரடியால 14 சீரிஸை வெளியிட ஷாவ்மி முடிவு! first appeared on .

]]>

ஷாவ்மி நிறுவனம் இதுவரை தனது ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் அடுத்தடுத்த மாடல்களை, எண் வரிசையில் சரியாக ஒன்றுக்குப் பின் ஒன்றாக அறிமுகம் செய்து வந்தது. ஆனால், இந்த முறை நிறுவனம் ஒரு நம்பரை மட்டும் முழுமையாக ஸ்கிப் செய்துவிட்டது.

ஷாவ்மி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த Xiaomi 12 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அடுத்தபடியாக, இந்த ஆண்டின் புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலை Xiaomi 13 என்ற பெயரில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேரடியாக 14 என்ற சீரிஸை வெளியிட இருக்கிறது.

பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

Xiaomi நிறுவனம் தனது அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் தொடரை விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல மாடல்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வரிசையானது Qualcomm Snapdragon 8 Gen2 SoC உடன் வெளிவரும் என்று நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

பெயரில் மாற்றமா?

வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் ரீடைல் பாக்ஸ் பேக்கிங் விபரங்கள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில், பிராண்டின் வரவிருக்கும் பிரீமியம் மாடல் Xiaomi 14 என்ற பெயருடன் காணப்படுகிறது.

ஆசியா பகுதியில் 13 நம்பர் லக் இல்லாத மோசமான எண்ணாகக் கருதப்படுகிறது. இந்த எண்ணைப் பெரும்பாலானோர் ஒதுக்குகின்றனர். இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், சில அடுக்குமாடி வளாகங்களில் கூட 13வது தளம் 14 ஆம் தளமாக பெயர் மாற்றப்பட்டிருக்கும். அதேபோல், வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள அறை எண்களில் கூட இந்த எண் ஒதுக்கப்பட்டிருக்கும். இந்தியர்களுக்கு இந்த எண் மீது ஒரு பெரிய பயம் கலந்த ஐயம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இதையெல்லாம் அறிந்து தான், ஷாவ்மி நிறுவனம் இப்போது அதன் வரவிருக்கும் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விற்பனை கெட்டுவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, 13 ஆம் நம்பரை ஸ்கிப் செய்து, நேரடியாக 14 ஆம் எண்ணிற்கு ஜம்ப் அடித்துவிட்டது போல் தெரிகிறது. மேற்கத்திய நாடுகளில் தான் 13 ஆம் நம்பர் துரதிர்ஷ்டவசமாகக் கருதப்படுகிறது. ஆனால் சீன கலாச்சாரத்தில், 13 ஆம் நம்பர் ஒரு அதிர்ஷ்ட எண் ஆகக் கருதப்படுகிறது. அதாவது சீன கலாச்சாரத்தின் படி, 13 ஆம் நம்பர் ‘உறுதியான வளர்ச்சி’ அல்லது ‘நிச்சயமான வெற்றியை’ குறிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் மனதில் சிறியளவு தயக்கம் கூட வரக்கூடாது என்ற எண்ணத்தில் ஷாவ்மி நிறுவனம் அதன் கலாச்சாரத்தில் இருக்கும் நம்பிக்கையைக் கூட மாற்றிவிட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த புதிய ஷாவ்மி 14 ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

இணையத்தில் கசிந்ததாகக் கூறப்படும் சமீபத்திய படம் போனின் ‘அபௌட் ஃபோன் (About phone)’ பகுதியைக் காட்டுகிறது. இது மீண்டும் Xiaomi 14 பிராண்டிங் பெயரை தெளிவாகக் காட்டுகிறது. அதேபோல், இந்த சாதனம் 12 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் MIUI 14 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸுடன் பூட் செய்கிறது என்பதைக் காட்டுகிறது.

சிப்செட் & டிஸ்பிளே

இந்த ஃபோனில் மாடல் எண் 2211133C என்றும் கட்டப்பட்டுள்ளது. இது சீனாவின் 3C சான்றிதழுடன் பொருந்துகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் பற்றிப் பார்க்கையில், இது 3.2GHz கிளாக் ஸ்பீட் கொண்டுள்ள Qualcomm Snapdragon 8 Gen 2 SoC ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கு முன், கசிந்த தகவல் படி, Xiaomi 14 ஆனது 6.2 அங்குல FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.

கேமரா

இந்த டிப்பிலே 120Hz ரெப்ரெஷ் ரேட் உடன் செல்ஃபி கேமராவிற்கான சென்டர்-பொசிஷன் செய்யப்பட்ட பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் வரும் என்று கூறப்படுகிறது. இதன் பின்புறத்தில் 50MP பிரைமரி கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் டெப்த் ஷூட்டர் மூலம் சேர்க்கப்படும். இதன் ஸ்டோரேஜ் 256ஜிபி வரை இருக்கக் கூடும்.

எப்போது கிடைக்கும்?

ஷாவ்மி 14 ஸ்மார்ட்போனின் சரியான பேட்டரி திறன் விவரங்கள் தெரியவில்லை என்றாலும், இந்த ஸ்மார்ட்போன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைப் பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது., Xiaomi 14 சாதனம் BIS சான்றிதழைப் பெற்றுள்ளது. அதாவது இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும், ஆனால் அடுத்த ஆண்டில் தான் இது கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

The post 13 சீரிஸை விட்டுவிட்டு நேரடியால 14 சீரிஸை வெளியிட ஷாவ்மி முடிவு! first appeared on .

]]>