xiaomi 12T https://www.91mobiles.com/tamil Thu, 04 Aug 2022 05:39:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அறிமுகமாகிறது ஷாவ்மி பேட் 6 https://www.91mobiles.com/tamil/xiaomi-pad-6-series-may-launching-soon-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=xiaomi-pad-6-series-may-launching-soon-in-india Thu, 04 Aug 2022 05:34:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1347 ஷாவ்மி நிறுவனம் ஷாவ்மி பேட் 6 எனும் டேப்லெட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஷாவ்மி பேட் 6 டேப்லெட் உடன் ஷாவ்மி பேட் 6 ப்ரோ, ஷாவ்மி பேட் 6 ப்ரோ 5ஜி மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாவ்மி பேட் 6 ஆனது 7800எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாவ்மி பேட் 6 மாடலில் மீடியாடெக் Dimensity சிப்செட் வசதி உள்ளது. இந்த டேப்லெட் மாடல் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் […]

The post அறிமுகமாகிறது ஷாவ்மி பேட் 6 first appeared on .

]]>

ஷாவ்மி நிறுவனம் ஷாவ்மி பேட் 6 எனும் டேப்லெட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஷாவ்மி பேட் 6 டேப்லெட் உடன் ஷாவ்மி பேட் 6 ப்ரோ, ஷாவ்மி பேட் 6 ப்ரோ 5ஜி மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாவ்மி பேட் 6 ஆனது 7800எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாவ்மி பேட் 6 மாடலில் மீடியாடெக் Dimensity சிப்செட் வசதி உள்ளது. இந்த டேப்லெட் மாடல் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஷாவ்மி டேப்லெட்.

ஷாவ்மி பேட் 6 ப்ரோ மற்றும் ஷாவ்மி பேட் 6 ப்ரோ 5ஜி மாடல்கள் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு டேப்லெட் மாடல்கள் LTPO டிஸ்பிளே மற்றும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் அம்சங்களைக் கொண்டுள்ளன.

குறிப்பாக ஷாவ்மி பேட் 6 ஆனது குறைவான விலையில் வெளிவரும். அதேசமயம் ஷாவ்மி பேட் 6 ப்ரோ மற்றும் பேட் 6 ப்ரோ 5ஜி மாடல்கள் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாவ்மி 12T

ஷாவ்மி நிறுவனம் இந்த டேப்லெட் மாடல்களுக்கு முன்பு ஷாவ்மி 12டி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த மாதம் ஷாவ்மி 12டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிகிறது. தற்போது இணையத்தில் கசிந்த ஷாவ்மி 12டி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஷாவ்மி 12T ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 8100 சிப்செட் உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற பல வசதிகளுக்கு இந்த சிப்செட் Dimensity 8100 சிப்செட் மிக அருமையாக இருக்கும். இந்த போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவருகிறது.

புதிய ஷாவ்மி 12T ஸ்மார்ட்போன் 108எம்பி Samsung ISOCELL HM6 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். குறிப்பாக எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது. இதுதவிர செல்ஃபிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் முன்பக்கத்தில் 20எம்பி கேமரா இருக்கிறது.

புதிய ஷாவ்மி 12T ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே, 1220 x 2712 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த புதிய ஷாவ்மி 12T ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி இருக்கும். இதனை சார்ஜ் செய்ய 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. மேலும் 12GB RAM மற்றும் 128 GB/256 GB சேமிப்புத்திறனைக்கொண்டுள்ளது. அதேபோல் இந்த ஷாவ்மி 12T ஸ்மார்ட்போன் ரூ.40,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

The post அறிமுகமாகிறது ஷாவ்மி பேட் 6 first appeared on .

]]>