zero ultra https://www.91mobiles.com/tamil Thu, 06 Oct 2022 11:37:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இன்பினிக்ஸின் புதிய ப்ளாக்‌ஷிப் போன் ஜீரோ அல்ட்ரா! https://www.91mobiles.com/tamil/infinix-zero-ultra-launched-price-specifications/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=infinix-zero-ultra-launched-price-specifications Thu, 06 Oct 2022 07:43:15 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2807 இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தயாவில் ஜீரோ அல்ட்ரா பெயரில் புது பளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. டிஸ்பிளே புதிய இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா போனில் 6.8 அங்குல 3D FHD+ AMIOLED டிஸ்ப்ளே இருக்கிறது. இது 2400×1080 பிக்சல் அடர்த்தியையும், 120hz ரிப்ரெஷ் ரேட்டையும் கொண்டு இருக்கிறது. சிப்செட் இது ஒரு 5G போன் ஆகும். இதில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 920 ப்ராசஸர் உபயோகிக்கப்பட்டு இருக்கிறது. இதோடு இதன் GPU மாலி-G68 MC4 ஆக […]

The post இன்பினிக்ஸின் புதிய ப்ளாக்‌ஷிப் போன் ஜீரோ அல்ட்ரா! first appeared on .

]]>

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தயாவில் ஜீரோ அல்ட்ரா பெயரில் புது பளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது.

டிஸ்பிளே
புதிய இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா போனில் 6.8 அங்குல 3D FHD+ AMIOLED டிஸ்ப்ளே இருக்கிறது. இது 2400×1080 பிக்சல் அடர்த்தியையும், 120hz ரிப்ரெஷ் ரேட்டையும் கொண்டு இருக்கிறது.

சிப்செட்
இது ஒரு 5G போன் ஆகும். இதில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 920 ப்ராசஸர் உபயோகிக்கப்பட்டு இருக்கிறது. இதோடு இதன் GPU மாலி-G68 MC4 ஆக இருக்கிறது. இதனால் இதன் செயல்திறன் நன்றாகவே இருக்கும் என நம்பலாம்.

மெமரி
இந்த ஜீரோ அல்ட்ரா மொபைலில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்புத்திறன் வழங்கப்பட்டு இருக்கிறது. ரேம் அளவை அதிகரித்துக் கொள்ள ‘ரேம் எக்ஸ்டன்ஷன்’ வசதியும் இதில் உள்ளது.

இயங்குதளம்

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 12ன் மேல் இன்பினிட்டியின் XOS12 கொண்டு கட்டமைக்கப்பட்ட இயங்குதளத்தைக் கொண்டு இருக்கிறது. இந்த மொபைல் இரட்டை சிம் வசதியோடு வெளியாகி இருக்கிறது.

கேமரா
இந்த மொபைலின் சிறப்பாக இருப்பது இதன் கேமரா தான். இதன் பின்புறத்தில் 200MP பிரைமரி கேமரா ஆப்டிகள் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதியோடு வருகிறது. இதன் மூலம் நடுக்கமற்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இதோடு 13MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் இரட்டை ப்ளாஷ் வசதியும் இருக்கிறது. வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்கள் எடுக்க முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

பேட்டரி
இந்த ஜீரோ அல்ட்ரா மொபைலில் 4500mAh பேட்டரி 180W Thunder charge fast charging support உடன் வருகிறது. இதன் காரணமாக இந்த மொபைலை சில நிமிடங்களிலேயே முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும்.

கனெக்டிவிட்டி
இந்த மொபைலில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. அதோடு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, Type-C போர்ட், WiFi 6, ப்ளூடூத் 5.2, GPS, Glonass and Beidou போன்ற கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 3.5mm ஆடியோ ஜாக்கிற்கு பதிலாக டைப் சி போர்ட் வழியாகவே ஹெட்போனை இணைக்கும் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.

நிறம் மற்றும் அளவு
இந்த போன் Coslight Silver மற்றும் Genesis Noir என்ற இரண்டு நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இதில் Coslight Silver 165.50 × 74.50 × 8.76mm என்ற அளவிலும், Genesis Noir 165.50 × 75.08 × 9.16mm என்ற அளவிலும் வெளியாகி உள்ளது. இந்த மொபைலின் எடை 231 கிராம்.

விலை
இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை 520 டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 42,500 ஆக இருக்கலாம். இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

The post இன்பினிக்ஸின் புதிய ப்ளாக்‌ஷிப் போன் ஜீரோ அல்ட்ரா! first appeared on .

]]>