ZTE axon 30s https://www.91mobiles.com/tamil Wed, 28 Sep 2022 14:26:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இன்-டிஸ்ப்ளே கேமராவோடு வெளியானது ZTE அக்சான் 30S https://www.91mobiles.com/tamil/mobilephone-zte-axon-30s-with-up-to-12gb-ram-under-screen-camera-announced/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mobilephone-zte-axon-30s-with-up-to-12gb-ram-under-screen-camera-announced Wed, 28 Sep 2022 14:20:44 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2666 ZTE நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த அக்சான் 30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ZTE அக்சான் 30S மாடலில் 6.92 அங்குல FHD+OLED 10-பிட் பேனல் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 5 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், விசி லிக்விட் […]

The post இன்-டிஸ்ப்ளே கேமராவோடு வெளியானது ZTE அக்சான் 30S first appeared on .

]]>

ZTE நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த அக்சான் 30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

புதிய ZTE அக்சான் 30S மாடலில் 6.92 அங்குல FHD+OLED 10-பிட் பேனல் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 5 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், விசி லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் போன்றவை வழங்கப்பட்டு உள்ளன.

இத்துடன் 16MP இன்-டிஸ்ப்ளே கேமரா சென்சாரும், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரும் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP 120 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார், 4200 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

அம்சங்கள்

  • 6.92 அங்குல 2460×1080 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே
  • 120Hz ரிப்ரெஷ் ரேட்
  • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்
  • அட்ரினோ 650 GPU
  • 8ஜிபி LPDDR5 ரேம் – 128ஜிபி UFS3.1 மெமரி
  • 12ஜிபி LPDDR5 ரேம், 256ஜிபி UFS3.1 மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 12 மற்றும் மைஒஎஸ்12
  • 64MP பிரைமரி கேமரா
  • எல்இடி பிளாஷ்
  • 8MP அல்ட்ரா வைடு லென்ஸ்
  • 5MP மேக்ரோ லென்ஸ்
  • 2MP டெப்த் சென்சார்
  • 16MP செல்பி கேமரா
  • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • யுஎஸ்பி டைப் சி ஆடியோ
  • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
  • வைபை 6
  • ப்ளூடூத் 5.1
  • யுஎஸ்பி டைப் சி

விலை

ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போன் பிளாக் (கருப்பு) மற்றும் புளூ (நீலம்) நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்து 310 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 24 ஆயிரத்து 995 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை சீனாவில் ஏற்கனவே துவங்கிவிட்டது.

புதிய ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் டைனமிக் ஐலேண்ட் பெயரில் புது விதமான நோட்டிபிகேஷன் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பல்வேறு விதமான அலெர்ட்கள், நோட்டிபிகேஷன் மற்றும் உரையாடல்களை காட்டுகிறது. இதனையடுத்து ஆண்ட்ராய்டு பயனர்கள் இதுபோன்ற அம்சம் இல்லையே என வருத்தம் கொள்ள வேண்டாம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் டைனமிக் ஐலேண்ட் போன்ற அம்சத்தைக் கொண்டு வர மிக எளிமையான வழிமுறை உள்ளது.

இதற்கு பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் டைனமிக்-ஸ்பாட் (dynamicspot) எனும் செயலியை இன்ஸ்டால் செய்தால் போதுமானது. ஜாவோமோ உருவாக்கி இருக்கும் இந்த செயலி ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் போன்றே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகவே கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள நாட்ச் அளவுக்கு ஏற்ப ஐலேண்ட் அளவு மற்றும் எங்கு தோன்ற வேண்டும் என்ற விவரங்களை செட் செய்ய டைனமிக்-ஸ்பாட் வழி செய்கிறது. இத்துடன் செயலியை பல விதங்களில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எது போன்ற நோட்டிபிகேஷன்கள் திரையில் தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிக்க செய்கிறது.

இந்த செயலியின் இலவச பதிப்பில் அம்சங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. அதிக அம்சங்கள் நிறைந்த செயலியை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

The post இன்-டிஸ்ப்ளே கேமராவோடு வெளியானது ZTE அக்சான் 30S first appeared on .

]]>