அசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1

7,499 (இருப்பில் இல்லை) அசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர்(1.8 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 1.6 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • ஸ்னாப்ட்ராகன் 636
  • 3 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 5.99 இன்ச் (15.21 சென்டிமீட்டர்ஸ்)
  • 403 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி
கேமரா
  • 13 எம்பி + 5 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 8 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 5000 எம்எஎச்
  • ஃபாஸ்ட் சார்ஜிங்
  • மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.3/5
263642 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் டிசைன்

ஆல்-நியூ அசுஸ் ஸென்போன் 5.99 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் 18: 9 விகிதமும் மற்றும் 1,080 x 2,160 பிக்சல்கள் திரை ரெசல்யூஷனையும் அம்ஸங்களாக கொண்டுள்ளது. இது உயரிய பிக்சல் அடர்த்தியான 403 பிபிஐ கொண்டிருப்பதால் கூர்மையான மற்றும் தெளிவான டிஸ்ப்ளேவை வழங்குகிறது.

ஓஎஸ் மற்றும் கட்டமைப்பு

இந்த ஸ்மார்ட்போனின் செயல்திறனை இரண்டு க்ரயோ 260 குவாட் கோர் செயலிகள் 1.8ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.6ஜிகாஹெர்ட்ஸ் என்ற கடிகார வேகத்தில் இயக்கப்படவைக்கிறது. இவை அனைத்தும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்டின் மீது அமர்த்தப்பட்டுள்ளன. இதில் 3 ஜிபி ரேம் இருப்பதால் பலப்பணிகளின் முழு செயல்முறையையும் கவனித்து சுமுகமாக்குகிறது. இந்த சாதனத்தில் கேமிங்கை சார்ந்த செயல்களை அட்ரினோ 509 கிராபிக்ஸ் செயலி கவனித்துகொள்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் வி8.1 (ஓரியோ) இயக்க அமைப்பில் வேலை செய்கிறது.

பேட்டரி மற்றும் சேமிப்பு

அசுஸ் ஸென்போன் மேக்ஸ் ப்ரோ சக்திவாய்ந்த 5,000எம்ஏஹெச் லி-அயன் பேட்டரியுடன் வருகிறது, இது எந்த தடையுமின்றி சிறந்த காப்பை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 32ஜிபி உள்சேமிப்பு திறனும் மேலும் அதை 2டிபிக்கு விரிவாக்கும் வசதியும் சிறந்த விஷயமாக உள்ளது.

இணைப்பு மற்றும் கேமரா

அசுஸ் ஸென்போன் மேக்ஸ் ப்ரோ தரமான இணைப்பு அம்சங்களை கொண்டுள்ளது, அவை வைஃபை 802.11, மொபைல் ஹாட்ஸ்பாட், ப்ளூடூத், ஜி.பி.எஸ் மற்றும் என்.எஃப்.சியே ஆகும்.
கேமராவை வைத்து பார்க்கும் போது, நடுத்தரமான கேமராவுக்கு மேல் கிடைத்து விட்டது என்று சொன்னால் தவறாகாது. 13எம்பி + 5எம்பி இரட்டை முதன்மை கேமரா அமைப்பு நிலை கண்டறிதல், ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் போன்ற பிற அம்சங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது. 8எம்பி முன் கேமராவானது மென்மையான ஒளி ஃபிளாஷுடன் சேர்ந்து, பயனர்களுக்கு வியக்கவைக்கும் செல்பிக்களை எடுக்க உதவுகிறது.
முடிவிற்கு
அசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் புரோ சிறப்பான கேமராக்களை விரும்பும் அனைவரும் விரும்பக்கூடிய ஒரு நல்ல சாதனம் ஆகும். கேமராவைத் தவிர, இந்த போனின் பேட்டரியானது மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் சிறப்பான பேட்டரி பேக்-அப் கொடுக்க வல்லது. கேமரா மற்றும் பேட்டரியை தவிர்த்து, ஸ்டோரேஜ் இந்த போனில் சிறப்பாக உள்ளது. அதிகமான வெளிப்புற சேமிப்பு பேக்-அப்பிற்கு நன்றி சொல்லலாம். இருப்பினும் ஹைபிரிட் மெமரி கார்டு ஸ்லாட் என்பது ஒரு சின்ன தயக்கத்தை பயனர்களுக்கு அளிக்கிறது, ஒன்று கூடுதல் சிம் கார்டு அல்லது மெமரி கார்டு மட்டுமே பயன்படுத்த முடியும், இரண்டையும் உபயோக படுத்த முடியாத ஒரு சின்ன குறையை தவிர்த்து வேறெந்த குறையும் இந்த் ஸ்மார்ட்போனில் சொல்வதற்கு கிடையாது என்பது நாம் உற்றுநோக்க வேண்டிய ஒன்று.