ஓப்போ எஃப்9

16,500 (இருப்பில் இல்லை) ஓப்போ எஃப்9 எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர்(2 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 2 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • மீடியா டெக் ஹெலியோ பி60
  • 4 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 6.3 இன்ச் (16 சென்டிமீட்டர்ஸ்)
  • 409 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி
கேமரா
  • 16 எம்பி + 2 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 16 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 3500 எம்எஎச்
  • ஃபாஸ்ட் சார்ஜிங்
  • மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.5/5
41216 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் கேமரா

ஓப்போ எஃப்9 அம்சங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றான 6.3 அங்குல எப்ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் 1,080 x 2,280 பிக்சல்கள் திரை ரெசல்யூஷனும் அதோடு 400 பிபிஐ பிக்சல் அடர்த்தியும் மற்றும் ஈர்க்கக்கூடிய 19: 9 விகிதத்திலும் இருப்பதால் இது அழகான காட்சி அனுபவத்தை அனைவருக்கும் வழங்குகிறது. மேலும் இதனுடைய பேனல் கொரில்லா கிளாஸ் மூலம் பாதுக்காகப்பட்டது. கேமரா துறையில், இந்த தொலைபேசியானது 16எம்பி பிளஸ் 5எம்பி இரட்டை முதன்மை கேமராக்களுடன் பிடிஏஎப் மற்றும் ஃப்ளாஷ் கொண்ட அம்சங்களுடன் இருப்பதால் புகைப்படங்களை திருப்தித்தரும் வண்ணத்தில் உருவாக்குவதோடு கவர்ச்சிகரமாகவும் தருகிறது. 16எம்பியை கொண்ட முன் கேமராவானது உயரிய செல்ஃபிக்களை துல்லியமாக எடுக்கவுதவுகிறது.

சேமிப்பு மற்றும் கட்டமைப்பு 

ஒப்போ எஃப்9 கௌரவமான 64ஜிபி உட்சேமிப்பும், மேலும் 256ஜிபி வரை அதிகரிக்ககூடிய சக்தியும், எப்போதுமே சிறந்த ஒன்று. இந்த தொலைபேசி சக்தியை மீடியா டெக் ஹீலியோ பி60 சிப்செட்டின் மூலமும் இரண்டு குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ73 மற்றும் கார்டெக்ஸ் ஏ53 செயலிகள் மூலமும் பெறுகிறது, இதனால் 2ஜிகாஹெர்ட்ஸ் கடிகார வேகத்தில் இந்த சாதனம் செயல்படுகிறது. மாலி- ஜி72 எம்பி3 ஜி.பி.யூ மற்றும் திடமான 4 ஜிபி ரேமின் வலிமையும் சேர்ந்து நீங்கள் உபயோகிக்கும் பெரும்பாலான ஆப்கள் மற்றும் கேம்களில் சரளமான செயல்திறனை வழங்குகிறது. ஒப்போ எஃப்9 ஆனது உள்ளமைக்கப்பட்டிருக்கும் கைரேகை சென்சாரை பாதுகாப்பிற்காக சேர்த்திருக்கிறது.

பேட்டரி மற்றும் இணைப்பு

ஓப்போ எப்9 ஆனது 3,500எம்ஏஹெச் லி-பிஓ பேட்டரியைக் கொண்டது இது சாதனத்திற்கான சக்தியை வழங்கி முழுநாளுக்குமான சாதாரண பயன்பாட்டுக்கும் உதவுகிறது, மேலும் வேகமான சார்ஜிங்கின் ஆதரவு இந்த கருவிக்கான சக்தியை ஒப்பீட்டளவில் விரைவாகவும் இயங்கவைக்கிறது. இது 4ஜி வோல்ட் கூடிய இரட்டை நானோ சிம் ஸ்லாட்களைக் கொண்டிருக்கும் போன், எனவே அனைத்து நெட்வொர்க்குகளும் பிரச்சினையின்றி செயல்படுகிறது. கூடுதல் இணைப்பு அம்சங்களில் வைஃபை, ப்ளூடூத், ஏ-ஜிபிஎஸ் மற்றும் க்ளோனஸ் உதவியுடன் இருப்பிடத்தை அறியும் வசதி ஆகியவையும் அடங்கும். போர்ட்களின் பிரிவில், இந்த சாதனம் யூஎஸ்பி சி-வகை சார்ஜிங்கையும் மற்றும் பெரியளவிலான சேமிப்பு அதோடு 2.5 மிமீ ஆடியோ ஜாக்கும் கொண்டுள்ளது. 
முடிவிற்கு
ஓப்போ எஃப் 9 போன் அனைத்து அம்சங்களும் நிரம்பிய ஒப்போவின் ஒரு சிறந்த இன்னொரு வெளியீடாகும். அழகிய எஃப்ஹெச்டி திரையில் இருந்து பெரிய காட்சியமைப்புகளுக்கான பிரத்யேக டிஸ்ப்ளே, நேர்த்தியான அழகிய புகைப்படங்களை எடுக்க கேமராக்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு வலுவான கட்டமைப்பு மூலம் சிக்கலின்றி ஒரு மென்மையான உபயோகத்தை இந்த போன் அளிப்பதால் ஒரு நல்ல அனுபவத்தை நீங்கள் பெற முடியும். சேமிப்பை பொறுத்தவரை ஒரு மிகையான மற்றும் நீட்டித்துக்கொள்ளக்கூடிய வகையில் இருப்பது அனைவருக்கும் பிடித்த வண்ணம் உள்ளது. கடைசியாக, மிதமான அளவிலான பேட்டரி ஒரு நாள் முழுதும் தேவையான பேட்டரி ஆதரவை வழங்குகிறது. விரைவான சார்ஜிங் வசதி இருப்பதால் இந்த சாதனத்தை சார்ஜ் செய்ய நீங்கள் நீண்ட நேரம் ’காத்திருக்க வேண்டாம். ஒட்டுமொத்தமாக, இந்த விலையில் நம் சொந்தமாக்கி கொளவதற்கான அனைத்து அம்சமும் நிறைந்த ஒரு நல்ல சாதனம் இதுவாகும்.