சாம்சங் கேலக்ஸி ஜே2 2018

8,200 (இருப்பில் இல்லை) சாம்சங் கேலக்ஸி ஜே2 2018 எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • குவாட்கோர், 1.4 கிகா ஹெர்ட்ஸ்
  • ஸ்னாப்ட்ராகன் 425
  • 2 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 5.0 இன்ச் (12.7 சென்டிமீட்டர்ஸ்)
  • 220 பிபிஐ, சூப்பர் அமோலெட்
கேமரா
  • 8 எம்பி ப்ரைமரி கேமரா
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 5 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 2600 எம்எஎச்
  • விரைவான சார்ஜிங் கிடையாது
  • மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.3/5
8518 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் கேமரா

சாம்சங் கேலக்ஸி ஜே2 2018 இன் அம்சங்களுள் 5-அங்குல சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளேயுடன் கூடிய திரை ரெசல்யூஷன் 540 x 960 பிக்ஸெல்களும் ஒன்றாகும். அதன் ஆயுதமாக 8எம்பி முதன்மை கேமரா புகைப்படங்கள் எடுக்கவும் ஒளிப்பதிவு செய்யவும் செயல்படுகிறது. ஒரு 5எம்பி கேமரா செல்ஃபி காதலர்களுக்காகவே பிரத்யேகமாக போனின் முன் அமைக்கப்பட்டிருக்கிறது. இருட்டிலோ இல்லை வெளிச்சம் பத்தாதபோதோ உதவுவதற்கு, எல்இடி ஃப்ளாஷ் இரண்டு முனைகளிலும் உள்ளது. கறுப்பு, இளஞ்சிவப்பு மற்றும் தங்கம் என மூன்று நிறங்களில் இந்த தொலைபேசி கிடைக்கிறது.

கட்டமைப்பு மற்றும் சேமிப்பு

சாம்சங் கேலக்ஸி ஜே2 2018யில் 1.4ஜிகாஹெர்ட்ஸ், கார்டெக்ஸ் ஏ53 குவாட்-கோர் செயலியானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 எம்எஸ்எம்8917 சிப்செட்டின் மீது அமர்த்தப்பட்டுள்ளது அதுவே இந்த போனின் மூளையாக செயல்படுகிறது. செயலியானது 2 ஜிபி ரேம் உடன் இணைந்து அதிகமான பலப்பணிகளை கையாளும்போது ஒரு சக்தி வாய்ந்த செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இந்த சேர்க்கைகளுடன் உள்ளடக்கிய அட்ரீனோ 308 ஜிபியூவும் இருக்கிறது அது கிராபிக்ஸ் துறையை பார்த்துக்கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போனிடம் 16ஜிபி கொண்ட உள்ளடக்கிய சேமிப்பிடம் இருக்கிறது அதை 64ஜிபி வரை மெம்மரி கார்டை கொண்டு அதிகரித்துக்கொள்ளலாம். இந்த சாதனமானது ஆண்ட்ராய்டு வீ7.19(நௌகாட்) இயக்க அமைப்பின் மூலம் வேலைசெய்கிறது.

பேட்டரி மற்றும் இணைப்பு

சாம்சங் கேலக்ஸி ஜே2 2018 சராசரியாக 2,600எம்எஹெச் லி-அயன் பேட்டரியிலிருந்து அதன் சக்தியைப் பெற்றுள்ளது. இணைப்பின் முக்கியத்துவத்தை வைத்து பார்க்கும்போது வோல்டே , வைஃபை, மொபைல் ஹாட்ஸ்பாட், ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி. உடன் 4ஜி - ஸ்மார்ட்போன் போன்ற பல வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் வழங்குகிறது
முடிவிற்கு
சாம்சங் கேலக்ஸி ஜே2 2018 போன் நமது பட்ஜெட்-ப்ரென்ட்லியாகவும் அனைத்து அம்சங்களும் பொருந்திய ஒரு நல்ல ஸ்மார்ட்போன் ஆகும். சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே சாதனத்தின் பயன்களில் ஒன்றாக இருப்பதால், வீடியோக்களோ அல்லது திரைப்படங்களோ நமது கண்களை கவர்ந்திழுக்கக்கூடியதாக உள்ளது. இரண்டு கேமராக்களுமே எல்ஈடி ஃப்ளாஷ் கொண்டிருப்பதால் நல்ல தரமான புகைப்படங்களை பிடிக்க உதவுகின்றன. தரமான செயலி என்பதால் போன் பலப்பணிகளை செய்யும் போது எந்த தடங்கலும் நேராமல் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருக்கிறது. எனினும், மேம்பட்ட பேட்டரி காப்பு இருந்திருந்தால் பயனருக்கு கூடுதல் உதவியாக அமைந்திருக்கும் .