சியோமி ரெட்மி நோட் 6 புரோ

8,999 (இருப்பில் இல்லை) சியோமி ரெட்மி நோட் 6 புரோ எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • ஆக்டா கோர்(1.8 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 1.6 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)
  • ஸ்னாப்ட்ராகன் 636
  • 4 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 6.26 இன்ச் (15.9 சென்டிமீட்டர்ஸ்)
  • 403 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி
கேமரா
  • 12 எம்பி + 5 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்
  • டூயல் கலர் எல்ஈடி ஃப்ளாஷ்
  • 20 எம்பி + 2 எம்பி டூயல் ஃபரண்ட் கேமராஸ்
பேட்டரி
  • 4000 எம்எஎச்
  • விரைவு சார்ஜிங் 3.0
  • மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
4.5/5
621916 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் டிசைன் :

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ 6.26 இன்ச் அளவுள்ள ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டது. தெளிவான மற்றும் கூர்மையான பார்வை அனுபவத்திற்கு ஏதுவாக 1,080 x 2,280 பிக்சல் திரை ரெசல்யூஷனும் 403பிபிஐ பிக்சல் அடர்த்தியும் இதில் உள்ளது.  

கட்டமைப்பு:

ரெட்மி நோட் 6 ப்ரோ அதிக செயல்பாட்டினை அளிப்பதற்காக குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் கூடிய ஆக்டா-கோர் (1.8 ஜிகாஹெர்ட்ஸ், க்வாட் கோர், க்ரயோ 260+1.6ஜிகாஹெர்ட்ஸ், குவாட்கோர், க்ரயோ 260) செயலியினை கோண்டுள்ளது. சீரான கிராபிக்ஸை அளிக்க அட்ரினோ 509 ஜிபியூ உள்ளது. கருவியின் பல்வேறு செயல்களை கவனித்துக்கொள்ள 4ஜிபி ரேம் உள்ளது.

கேமரா மற்றும் சேமிப்பு:

ரெட்மி நோட் 6 ப்ரோ அற்புதமான படப்பிடிப்பு அனுபவத்தை அளிக்கும் 12எம்பி+5எம்பி சென்சார்கள் அடங்கிய முதன்மை கேமராக்களை கொண்டுள்ளது. முன்னே உள்ள 20எம்பி+2எம்பி கேமரா செல்ஃபீ பிரியர்களுக்கு மயக்கும் தரம்வாய்ந்த படங்களையும் தெளிவான வீடியோ அழைப்பு அனுபவத்தை அளித்து அவர்களை ஈர்க்கிறது.

ரெட்மி நோட் 6ப்ரோ பயன்பாட்டாளரின் கோப்புகள் மற்றும் தரவுகளை சேமிக்க ஏதுவாக 64ஜிபி திறங்கொண்ட உள்சேமிப்பு கட்டமைப்பினை கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி அட்டை மூலம் 256ஜிபி வரை விரிவாக்கம்செய்யப்படக்கூடிய வெளிப்புற மெமரி ஸ்லாட் உள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு:

ஒரே சார்ஜில் பலமணி நேரம் காப்பீடு அளிக்கக்கூடிய 4000எம்ஏஎச் திறன் கொண்ட லி-பாலிமர் பேட்டரியினை இந்த கைப்பேசி பெற்றுள்ளது. இது 4ஜி வோல்ட், வைஃபை 802.11, மொபைல் ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இது, கருவியின் இடத்தை கண்டறிய உதவும் ஏ-ஜிபிஎஸ் அம்சத்தினையும் பெற்றுள்ளது.
முடிவிற்கு
புதிய சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ அனைத்து வகையான செயல்திறங்களை வழங்கக்கூடிய, பல அம்சங்களை கொண்ட மிட்-ரேஞ்சு ஸ்மார்ட்போன். இது பிரீமியமாக தோற்றம் தரும் வடிவமைப்பினையும் திரையினை கீரல்களிலிருந்து காக்க கார்னிங் கொரில்லா கண்ணாடியினையும் கொண்டது. பல பணிகளை செய்வதற்காகவும் மற்றும் உயர் ரக விளையாட்டுகள் விளையாடுவதற்கும் போதுமானதாக செயலி உள்ளது. இதன் சிறந்த பேட்டரி பேக்அப் வியக்கத்தக்கதாக உள்ளது. எனினும் இது ஹைப்ரிட் ஸ்லாட்டுடன் வருவது இதற்கு ஒரு பின்னடைவாக இருக்கலாம்.