மொபைல் வேர்ல்டு காங்கிரஸின் இந்த வார நிகழ்வில் 12 புதிய போன்கள் வெளியாகின்றன!

Highlights

  • ஒன்றல்ல, இரண்டல்ல.. மார்ச் 1-க்குள் மொத்தம் 12 புதிய போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
  • ஷாவ்மி நிறுவனம், இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் உலகலாவிய நிகழ்வில், அதன் ஷாவ்மி 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

பார்ஸிலோனா நாட்டில் நாளை (27-02-2023) முதல் மார்ச் 2 வரை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (Mobile World Congress 2023) என்னும் நிகழ்வு நடக்க இருக்கிறது. இந் நிகழ்வில் மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய மொபைல்களையும். வருங்காலத்தில் தாங்கள் கொண்டு வர இருக்கும் தொழில்நுட்பங்களையும் பார்வைக்கு வைப்பார்கள். அப்படி பல நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்த் இருக்கின்றன. அவைகளில் சில போன்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால் அவைகளின் மாடல் பெயர்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் ஏற்கனவே உள்ளன!

Xiaomi 13, Xiaomi 13 Pro மற்றும் Xiaomi 13 Lite

ஷாவ்மி நிறுவனம், இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் உலகலாவிய நிகழ்வில், அதன் ஷாவ்மி 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் கீழ் ஷாவ்மி 13, ஷாவ்மி 13 ப்ரோ மற்றும் ஷாவ்மி 13 லைட் என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும்.

 

ஷாவ்மி 13 சீரிஸ்

ஷாவ்மி 13 சீரிஸில் லைக்காவால் ட்யூன் செய்யப்பட்ட கேமராக்கள் இடம்பெறலாம். மேலும் இதில் ஒன்பிளஸ் 11, ஐக்யூ 11 போன்ற போன்களில் உள்ள லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் இடம்பெறலாம். இதுதவிர 12ஜிபி வரை ரேம் மற்றும் 256 இன்டர்னல் ஸ்டோரேஜ் ஒதுக்கப்படலாம். திடீர் விலைக்குறைப்பு!

Realme GT 3

ரியல்மியின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக ரியல்மி ஜிடி 3 வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஏற்கனவே சீனாவில் அறிமுகமான ரியல்மி ஜிடி நியோ 5 (Realme GT Neo 5) என்கிற ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாகும். இது 150W மற்றும் 240W என்கிற 2 சார்ஜிங் ஸ்பீட் வகைகளில் கிடைக்கும். மேலும் 6.74 அங்குல 10-பிட் 144ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட், 50எம்பி சோனி IMX890 மெயின் கேமரா, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் போன்ற முக்கிய அம்சங்களையும் கொண்டு இருக்கும்.

 

Honor Magic 5 Series & Honor Magic Vs ஃபோல்டபிள் போன்

ஹானர் நிறுவனம் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 6 மணிக்கு உலகளாவிய நிகழ்வொன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்நிகழ்வில் 4 ஸ்மார்ட்போன்களை உள்ளடக்கிய ஹானர் மேஜிக் 5 சீரிஸ் மற்றும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஹானர் மேஜிக் விஎஸ்-ஐ அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹானர் மேஜிக் 5 சீரீஸின் கீழ் ஹானர் மேஜிக் 5, ஹானர் மேஜிக் 5 ப்ரோ, ஹானர் மேஜிக் 5 அல்டிமேட் மற்றும் ஹானர் மேஜிக் 5 லைட் என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். அவைகளில் முதல் 3 போன்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டும், கடைசி மாடலில் எஸ்டி 695 ப்ராசஸரும் இடம்பெறலாம்.

Vivo V27 சீரிஸ்

Vivo V27, Vivo V27 Pro மற்றும் Vivo V27e விவோவின் புதிய வி27 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற மார்ச் 1 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் கீழ் விவோ வி27, விவோ வி27 ப்ரோ மற்றும் விவோ வி27இ என மொத்தம் 3 மாடல்கள் வெளியாகும். இந்த மூன்றுமே சீனாவில் விற்கப்படும் விவோ எஸ்16 சீரீஸின் ரீபிராண்டட் வெர்ஷன்களாகும்.