தலையங்கக் கொள்கை

91mobiles Tamil அனைத்து உறுப்பினர்களும் எடிட்டோடியலின் இந்த கொள்கைகளைப்பின்பற்றவும்.

91mobiles Tamil வெளியாகும் அனைத்து கட்டுரைகளும் சுயசார்பின்றி, நிறுவனத்தின் வணிக ஒப்பந்தங்களை பாதிக்காதபடி இருக்க வேண்டும்.

இந்த தளத்தில் வெளியாகும் எந்த பொருளின் விமர்சனமும் ஸ்பான்சர் மூலமோ அல்லது பணம் பெற்றோ எழுதப்படுவதில்லை.

91mobiles Tamil வணிகமானது, தளத்தின் விளம்பரங்கள் மற்றும் அஃப்ளியேட் விற்பனை மூலமே கிடைக்கிறது. இவை கட்டுரையின் தரத்தை பாதிக்காதபடி கவனத்தில் கொள்ளப்படுகிறது.

வெளியாகும் அனைத்து பெய்டு கட்டுரைகளும் ஒரு ப்ராண்ட் ஸ்டோரி குறிச்சொல்லோடே வெளியாகும்.

நமது தளத்தின் விளம்பரங்களின் பேனர்களில் நமது விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் குழுவினரின் பங்கு இருக்கும். இருந்தபோதும், அது நாம் வெளியிடும் கண்டண்ட்களை ஒருபோதும் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இருக்காது.

நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் நமது குழுவினர் பங்கெடுக்கச் செல்லும் போது, சில நேரங்களில் அதற்கான பயணச் செலவு மற்றும் தங்குவதற்கான செலவை விழா ஏற்பாட்டளர்கள் செய்வதுண்டு. அப்படிபட்ட விழாக்களில் கலந்து கொள்ளும்போது, நமது படைப்பு எவ்வகையிலும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு ஒருசார்பாக, சாதகமானதாக இருக்கக்கூடாது.

91mobiles Tamil எடிட்டோரியல் குழு சில நேரங்களில் நிறுவனங்களின் பணம் செலுத்தும் வகையிலான நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகளில் (கூட்டங்களில்) கலந்து கொள்ள வேண்டி இருக்கும். அப்படிப்பட்ட தருணங்களில் நமது விற்பனைக்குழு அவர்களோடு தொடர்பு கொண்டு அதற்கான விஷயங்களை கவனித்துக் கொள்ளும். இதன் மூலம் நமது எடிட்டோரியல் குழுவின் எழுத்து எந்த வகையிலும் பாதிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

சில பொருட்களை வாங்குவதற்கென நாம் நம் இணையதளத்தில் வியாபார (அஃப்ளியேட்) இணைப்பை வழங்குவதுண்டு. அதன் மூலம் யாரேனும் பொருட்களை வாங்கும் போது, நிறுவனத்திற்கு சிறு விற்பனைப்பங்கு கிடைக்கலாம். இதுவும் நமது எழுத்தை பாதிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.