
குறைந்த விலையில் ஒரு நல்ல பீச்சர் போன்களை வாங்க நினைக்கும் மக்கள் அமேசானின் இந்த குடியரசு தின சிறப்பு விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம். அமேசான் தளத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் பீச்சர் போன்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.
நோக்கியா 5310
அமேசான் தளத்தில் நோக்கியா 5310 பீச்சர் போனுக்கு தற்போது 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த பீச்சர் போனை ரூ.3,399-விலையில் வாங்க முடியும். 2.4 அங்குல QVGA டிஸ்ப்ளே, பிஸிக்கல் T9 கீ-போர்டு, மீடியாடெக் எம்டி 6260 ஏ சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். இந்த போன் 8 எம்பி ரேம் மற்றும் 16 எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. கூடவே, சிங்கிள் விஜிஏ கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, 1,200 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த நோக்கியா 5310 மாடல் வெளிவந்துள்ளது.
மோட்டோரோலா ஏ70
அமேசான் தளத்தில் முன்பு ரூ.2320-விலையில் விற்பனை செய்யப்பட்ட மோட்டோரோலா ஏ70 தற்போது ரூ.1849 விலையில் வாங்க முடியும். இந்த மோட்டோரோலா ஏ70 மொபைல், 1750 எம்ஏஎச் பேட்டரியோடு வெளிவந்துள்ளது. எனவே 6 நாட்கள் வரை இந்த போன் பேட்டரி பேக்கப் கொடுக்கும். இதோடு 2.4 அங்குல டிஸ்பிளே, மீடியாடெக் பிராசஸர், வயர்லெஸ் எப்எம் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.
நோக்கியா 105 பிளஸ்
நோக்கியா 105 பிளஸ் பீச்சர் போன் ஆனது முன்பு ரூ.1699-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அமேசான் அறிவித்துள்ள தள்ளுபடி மூலம் இந்த பீச்சர் போனை ரூ.1299-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த மொபைல் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. நோக்கியா 105 பிளஸ் மாடலில் 32ஜிபி மெமரி கார்டை பயன்படுத்த முடியும். கூடுதலாக இது ஒரு எம்பி3 பிளேயர் மற்றும் ஆட்டோ கால் ரெக்கார்டிங் அம்சத்தையும் கொண்டுள்ளது. இந்த மொபைலில் டார்ச் வசதியும் இருக்கிறது. அதேபோல் ஸ்னேக் போன்ற கிளாசிக் கேம்களுடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா போன். இந்த போனின் பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆக சுமார் 1.5 மணி நேரம் ஆகும். அதன் மூலம் 18 நாட்கள் வரையிலான standby time-ஐ பெற முடியும். மேலும் இந்த பீச்சர் போன் 1.77 அங்குல டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. இந்த மொபைல் S30+ இயங்குதளத்தில் இயங்குகிறது.

நோக்கியா 225 4ஜி
நோக்கியா 225 4ஜி பீச்சர் போன் முன்பு ரூ.4,399-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த போனுக்கு அமேசான் தளத்தில் 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த நோக்கியா பீச்சர் போனை தற்போது ரூ.3,599-விலையில் வாங்க முடியும். இந்த நோக்கியா 225 4ஜி போன் ஆனது 2.4 அங்குல டிஸ்பிளே, Unisoc UMS9117 பிராசஸர், 64எம்பி ரேம், 128எம்பி ஸ்டோரேஜ், 4ஜிபி வோல்ட்இ ஆதரவு, ப்ளூடூத் 5.0, FM ரேடியோ, மைக்ரோ-USB போர்ட் மற்றும் 3.5MM ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலகளின் பட்டியலைக் காண, அவற்றில் மிகச்சிறந்ததைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!








