Home News விலை குறைப்புக்குப் பின் ரூ10,000க்கு கீழ் வந்த சாம்சங் போன்!

விலை குறைப்புக்குப் பின் ரூ10,000க்கு கீழ் வந்த சாம்சங் போன்!

தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ03 (Samsung Galaxy A03) ஸ்மார்ட்போனுக்கு ரூ.985 அளவில் விலைக்குறைப்புச் சலுகை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த விலைக்குறைப்பு கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் கிடைக்கிறது.

புதிய விலை VS பழைய விலை!

கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy A03 ஆனது 3ஜிபி + 32ஜிபி மற்றும் 4ஜிபி + 64ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் வேரியண்ட்களின் கீழ் முறையே ரூ.10,499 மற்றும் ரூ.11,999க்கு அறிமுகமானது.

தற்போது ரூ.985 என்கிற விலைக்குறைப்புக்கு பிறகு, 3ஜிபி ரேம் மொபைல் ரூ.9,514 க்கும், மறுகையில் உள்ள 4ஜிபி ரேம் மொபைல் ரூ.11,014க்கும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நீலம், கருப்பு மற்றும் சிகப்பு என 3 நிறத் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

ஏன் இந்த திடீர் விலைக்குறைப்பு?

சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனாகவும் A03 மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன Samsung Galaxy A04 அறிமுகமாகி விட்டது. 50MP கேமரா மற்றும் 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களைக் கொண்டு இருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதனால் தான் கேலக்ஸி 03 மொபைலுக்கு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Samsung Galaxy A04 விலை என்ன?

ஐரோப்பிய சந்தைகளில் Samsung Galaxy A04 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.13,410க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை, செம்பு மற்றும் பசை ஆகிய நிறத் தேர்வுகளில் கிடைக்கும் என்று சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த 2 ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட்? விலைக்குறைக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ03 மாடலை வாங்கலாமா? அல்லது வரப்போகும் கேலக்ஸி ஏ04 மாடலுக்காக காத்திருக்கலாமா?

இரண்டில் எதை வாங்குவது என்பதை பற்றி ஒரு முடிவுக்கு வரும் முன்னர், இந்த 2 ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களை பற்றி பார்த்து விடலாம்!

சாம்சங் Galaxy A03 முக்கிய அம்சங்கள்:

சாம்சங் Galaxy A04 முக்கிய அம்சங்கள்:

எதை வாங்கலாம்?

உங்களுக்கே புரிந்து இருக்கும். நாம் மேற்கண்ட 2 ஸ்மார்ட்போன்களுக்கும் பெரிய அளவிலான வித்தியாசம் எதுவும் இல்லை; ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ஐ தவிர்த்து!

ஒருவேளை உங்களுக்கு லேட்டஸ்ட் ஓஎஸ் பற்றி கவலை இல்லை என்றால்.. மற்றும் ரூ.3500 க்கும் மேலான பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் – A03 மாடலை வாங்குங்கள். இல்லை என்றால் காத்திருந்து A04 மாடலை வாங்குங்கள்!