Home List ரூ.15,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான 5G போன்கள்

ரூ.15,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான 5G போன்கள்

5ஜி சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பல செல்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதிலும் பட்ஜெட் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்தியாவில் ரூ.15,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான 5ஜி போன்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போனை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் 6.5 அங்குல எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது. மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரியோடு இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 50எம்பி பிரைமரி கேமரா +2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 5எம்பி செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

ரியல்மி 9ஐ 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,499-விலையில் வாங்க முடியும். இந்த போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் முன்பக்கத்தில் 8எம்பி செல்ஃபி கேமரா, Mediatek Dimensity 810 5G பிராசஸர், 6.6 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களோடு வெளிவந்துள்ளது இந்த ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 11T 5ஜி

அமேசான் தளத்தில் ரெட்மி நோட் 11T 5ஜி ஸ்மார்ட்போன் 14,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் 50எம்பி எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்ஃபி கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட்,6.6 அங்குல டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி நோட் 11T 5ஜி ஸ்மார்ட்போன்.

போக்கோ எம்4 5ஜி

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.14,990-விலையில் வாங்க முடியும். இந்த போக்கோ போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே செல்ஃபிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. அதேபோல் 6.58 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி,பாஸ்ட் சார்ஜிங் வசதி, Mediatek Dimensity 700 சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு இருக்கிறது.

ஒப்போ ஏ74 5ஜி

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ74 5ஜி போனை ரூ.14,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் முன்பக்கத்தில் 8எம்பி செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் குவால்காம் ஸனாப்டிராகன் 480 5ஜி சிப்செட், 6.49 அங்குல டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்.