Home News 50MP கேமரா, 8GB + 8GB ரேம் கொண்ட Vivo Y36 4G இந்தியாவிற்கு வருகிறது

50MP கேமரா, 8GB + 8GB ரேம் கொண்ட Vivo Y36 4G இந்தியாவிற்கு வருகிறது

Highlights
  • இது Qualcomm Snapdragon 680 இல் இயங்கும்.
  • இந்த Vivo போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கிடைக்கும்.
  • இதில் 1TB வரையிலான மெமரி கார்டை பயன்படுத்தலாம்

 

Vivo நிறுவனம் இந்தியாவில் மற்றொரு புதிய குறைந்த பட்ஜெட் மொபைல் போனை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இது Vivo Y36 4G என்ற பெயரில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். நிறுவனம் அதன் புதிய ‘ஒய்’ சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை என்றாலும், ஆதாரங்களை மேற்கோள் காட்டி, 91மொபைல்ஸ் அதன் முழு விவரக்குறிப்புகள் மற்றும் புகைப்படங்களைப் பெற்றுள்ளது. விவோ ஒய்36 4ஜி அறிமுகப்படுத்துவதற்கு முன்பே போனின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

Vivo Y36 4G விவரக்குறிப்புகள்

 

குவால்காம் ஸ்னாப்டிராகன் 680

Vivo Y36 4G போனில் Qualcomm Snapdragon 680 octa-core சிப்செட் கொடுக்கப்படும். இந்த போன் FuntouchOS 13 உடன் இணைந்து செயல்படும் Android 13 இயங்குதளத்துடன் அறிமுகப்படுத்தப்படும்.

 

8ஜிபி நீட்டிக்கப்பட்ட ரேம்

8 ஜிபி எக்ஸ்டெண்ட் ரேம் (Extend RAM) தொழில்நுட்பமும் இந்த போனில் வழங்கப்படும். இந்த அம்சத்தின் மூலம், போனின் இன்டெர்னல் 8 ஜிபி ரேமோடு விர்ச்சுவல் ரேமைச் சேர்ப்பதன் மூலம்,  இந்த மொபைலின் ரேமை 16 ஜிபி ஆக்க முடியும். Vivo Y36 4G மொபைலுக்கு 256 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படும்.

 

6.64″ FHD+ 90Hz திரை

Vivo Y36 4G ஒரு பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனாக இருக்கும். இது 2388×1080 பிக்சல்கள் அடர்த்தி கொண்ட பெரிய 6.64-இன்ச் FullHD+ திரையோடு வெளியிடப்படும். இந்த டிஸ்ப்ளே LCD பேனலில் உருவாக்கப்படும் மற்றும் 90Hz புதுப்பிப்பு விகிதத்தில் வேலை செய்யும்.

50MP இரட்டை பின்புற & 16MP முன் கேமரா

Vivo Y36 4G இன் பின்புற பேனலில், இரண்டு கேமரா சென்சார்கள் வழங்கபட்டு இருக்கும். ஒன்று F / 2.4 அப்பசருடன் கூடிய 50 மெகாபிக்சல் லென்ஸாகவும் மற்றொன்று F / 2.4 அப்பசர் கொண்ட 2 மெகாபிக்சல் போகா சென்சாராகவும் இருக்கும். இதேபோல், Vivo Y36 4G மொபைலின் முன் பேனலில் F/ 2.0 அப்பசர் கொண்ட 16 மெகாபிக்சல் செல்ஃபி சென்சார் வழங்கப்படும்.

 

5000mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங்

Vivo Y36 4G க்கு 5,000 mAh பேட்டரி வழங்கப்படும். இந்த பெரிய பேட்டரிக்கு வேகமான சக்தியை வழங்க, 44W வேகமான சார்ஜிங் தொழில்நுட்பமும் Y36 4G மாடலில் காணப்படும்.

 

கனெக்டிவிட்டி

பாதுகாப்பிற்காக, Vivo Y36 4G பக்க பேனலில் கைரேகை சென்சார் வழங்கப்படும். இதனுடன், டூயல் சிம் கார்டு + 1 மெமரி கார்டு ஆதரவும் போனில் கிடைக்கும். மொபைலில் Wi-Fi 5GHz, Bluetooth 5.1 மற்றும் USB Type-C ஆகியவை வழங்கப்படும்.

Vivo Y36 4G அறிமுகம் எப்போது?

Vivo Y36 4G இன் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை ஆதாரங்களில் இருந்து 91Mobiles பெற்றுள்ளது, அத்துடன் நிறுவனம் விரைவில் இந்த மொபைல் ஃபோனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. தொலைபேசியின் நிலையான வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், Y36 4G ஜூன் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

 

Vivo Y36 முக்கிய விவரக்குறிப்புகள்