[Exclusive] 50MP கேமரா மற்றும் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது LAVA Yuva 4 Pro 5G

Lava நிறுவனம் கடந்த ஆண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போனான Lava Yuva 3 Pro-வை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இப்போது இந்நிறுவனம் அதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பை கொண்டு வர தயாராகி வருகிறது.அதன்படி Lava நிறுவனம் Lava Yuva 4 Pro 5G யை அறிமுகப்படுத்தலாம் என்ற பிரத்யேகத் தகவலை நமது 91மொபைல்ஸ் பெற்றுள்ளது. இந்தியாவின் முன்னணி டிப்ஸ்டர் பராஸ் குக்லானி இது குறித்த தகவலை எங்களுக்கு அளித்துள்ளார். மேலும் அவர் மொபைலின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகளையும் பகிர்ந்துள்ளார். இந்த Lava Yuva 4 Pro 5G பற்றி இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

Lava Yuva 4 Pro 5G வடிவமைப்பு

எங்களுக்குக் கிடைத்த படத்தின் படி, மொபைலின் பின்புறத்தில் ஒரு பெரிய வட்ட கேமரா தொகுதி இருக்கும். அதில் இரட்டை கேமராக்கள் மற்றும் LED ஃபிளாஷ் லைட் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, லாவா பிராண்டிங் இந்த 5G மொபைலின் பின்புற இடது பக்கத்தில் கீழே எழுதப்பட்டுள்ளது. படத்தின் படி, மொபைல் நீல நிறத்தில் வரும். இருப்பினும், வெளியாகும் நேரத்தில், மொபைலை இன்னும் சில நிறங்களில் பார்க்க முடியும்.

போனின் பின்புற வடிவமைப்பைப் பார்த்தால், அது நேர்த்தியாகவும், வரம்பில் சிறந்ததாகவும் தெரிகிறது. அதன் பின்புறத்தில் உள்ள பெரிய கேமரா தொகுதியும் அழகாக இருக்கிறது. நடுவில் எழுதப்பட்ட  ‘50MP’ எழுத்துக்களும், கேமராவும் நன்றாக இருக்கிறது. டிசைனைப் பொறுத்தமட்டில், பிரீமியம் சாதனத்தின் தோற்றத்தையும் உணர்வையும் தரும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்று கூறலாம்.

Lava Yuva 4 Pro 5G : (பிரத்தியேக) விவரக்குறிப்புகள்

  • சிப்செட்: நிறுவனம் MediaTek Dimensity 6080 உடன் மொபைலை வெளியிடும். இது முன்னர் நிறுவனத்தின் மொபைல்களில் காணப்பட்டது.
  • ரேம்: நிறுவனத்தால் 6GB ரேம் கொண்டதாய் இந்த மொபைலை அறிமுகப்படுத்தும். இருப்பினும் அறிமுகத்தின் போது அதிக ரேம் வகைகளில் இந்த மொபைல் வரலாம். தற்போதைக்கு சேமிப்பகம் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
  • ஆப்பரேட்டிங் சிஸ்டம்: இது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் வழங்கப்படும். இது இரண்டு வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளுடன் (Security Update) வரலாம்.
  • கேமரா: மொபைலில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இதில் 50MP முதன்மை கேமரா மற்றும் 2MP இரண்டாம் நிலை சென்சார் கிடைக்கும். அதே நேரத்தில், செல்ஃபிக்காக 16 மெகாபிக்சல் கேமரா கிடைக்கும்.
  • பேட்டரி: மொபைலில் 5000mAh பேட்டரி இருக்கும்.

விலை குறையலாம்

Lava Yuva 4 Pro 5G இன் விலையைப் பொறுத்தவரை, நிறுவனம் முந்தைய மாடலை ரூ. 10,000 க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தியது. இம்முறையும் அதேபோன்ற எதிர்பார்ப்பு விலையில் உள்ளது. இது Lava வழங்கும் பட்ஜெட் 5G போனாக இருக்கலாம்.