16GB RAM, 32MP செல்ஃபி கேமராவோடு இந்தியாவில் வெளியிடப்பட்டது OPPO F23 5G

Highlights

  • இது Qualcomm Snapdragon 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
  • இது 8 ஜிபி இண்டர்னல் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டது.
  • இந்த போனை 18 நிமிடங்களில் 0 முதல் 50% வரை சார்ஜ் செய்ய முடியும்.

 

இந்தியாவில் அதன் ‘F’ தொடரை விரிவுபடுத்தும் வகையில், OPPO இன்று இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனான OPPO F23 5G ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த Oppo மொபைல் ஸ்டைலான தோற்றத்துடன் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் சிறந்த அம்சங்களைக் கொண்டிருக்கிறது. Oppo F23 5G இன் விலை உட்பட முழுமையான விவரங்களைப் பார்க்கலாம்.

 

Oppo F23 5G விலை

Oppo F23 5G போன் இந்தியாவில் சிங்கிள் மெமரி வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் வரும் இதன் விலை ரூ.24,999. இந்த மொபைல் போன் மே 18 முதல் போல்ட் கோல்ட் மற்றும் கூல் பிளாக் நிறங்களில் கிடைக்கும். இந்த மொபைலை ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி மற்றும் எஸ்பிஐ கார்டு பயன்படுத்தி8 வாங்கும் போது கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும்

Oppo f23 5g அம்சஙகள்

 

  • Oppo F23 5G டிஸ்ப்ளே
  • 6.72″ FHD+ டிஸ்ப்ளே
  • 120Hz புதுப்பிப்பு வீதம்

 

OPPO F23 5G ஃபோன் 2400 x 1080 பிக்சல்கள் அடர்த்தி கொண்ட 6.72 இன்ச் FullHD+ பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. திரையானது 120Hz புதுப்பிப்பு வீதத்திலும் 240Hz புதுப்பிப்பு வீதத்திலும் இயங்கும் LCD பேனலில் கட்டமைக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே 680nits பிரகாசம் மற்றும் 391ppi போன்ற அம்சங்களையும் பெறுகிறது. ஒப்போ இந்த போனை பாண்டா கிளாஸ் மூலம் பாதுகாத்துள்ளது.

  • Oppo F23 5G சிப்செட்
  • 8ஜிபி நீட்டிக்கப்பட்ட ரேம்
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்

 

Oppo F23 5G ஆனது ColorOS 13.1 உடன் இயங்கும் Android 13 இயங்குதளத்தோடு  அறிமுகப்படுத்தப்பட்டது. செயலாக்கத்திற்காக, ஸ்மார்ட்போன் 2.2GHz கடிகார வேகத்தில் இயங்கும் Qualcomm Snapdragon 695 octa-core சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஒப்போ போன் 8ஜிபி மெய்நிகர் (விர்சுவல்) ரேமை ஆதரிக்கிறது. இதன் மூலம் இந்த மொபைலின் ரேம் அதிகமாகிறது. இது வரைகலைக்கான Adreno 619 GPU ஐயும் கொண்டுள்ளது.

  • Oppo F23 5G கேமரா
  • 32MP முன் கேமரா
  • 64MP பின்புற கேமரா

 

OPPO F23 5G புகைப்படம் எடுப்பதற்காக மூன்று பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இதன் பேனலில் f/1.7 அப்பசருடன் கூடிய 64-மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. இது f/2.4 அப்பசர் கொண்ட 2-மெகாபிக்சல் மோனோ லென்ஸ் மற்றும் f/3.3 அப்பசர் கொண்ட 2-மெகாபிக்சல் மைக்ரோ சென்சார் உடன் வருகிறது. இந்த Oppo மொபைல் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்காக f/2.4 அப்பசர் கொண்ட 32 மெகாபிக்சல் முன் கேமராவோடு வெளிவருகிறது.

  • Oppo F23 5G – பேட்டரி & சார்ஜிங்
  • 5,000mAh பேட்டரி
  • 67W சூப்பர்வூக் சார்ஜிங்

 

OPPO F23 5G ஃபோனில் பவர் பேக்கப்பிற்காக 5,000mAh பேட்டரி உள்ளது. மேலும், இந்த Oppo மொபைல் 67W சூப்பர் வூக் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில் 0 முதல் 50% வரை சார்ஜ் செய்துவிட முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

 

Oppo f23 5g முக்கிய அம்சங்கள்

இந்த Oppo மொபைல் 13 5G பேண்டுகளை ஆதரிக்கிறது. ஜியோ மற்றும் ஏர்டெல்லின் 5ஜி நெட்வொர்க்கை இந்த பேண்டுகளில் பயன்படுத்தலாம்.

நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த போனை வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 6 மணிநேர அழைப்பு நேரத்தை வழங்க முடியும்.

ஸ்மார்ட் ரேம் விரிவாக்க அம்சத்தின் மூலம் இந்த ஃபோன் 16ஜிபி ரேமில் செயல்பட முடியும்.

Oppo F23 5G மைக்ரோSD கார்டு மூலம் 1TB வரையிலான சேமிப்புத்திறனை ஆதரிக்கிறது.

இது 40X மைக்ரோலென்ஸைக் கொண்டுள்ளது. இதனால் தூரத்தில் இருந்து கொண்டே நெருக்கமான காட்சிகளை படம் பிடிக்க முடியும்.

இந்த போன் IP54 சான்றிதழைப் பெற்றுள்ளது. இது நீர் மற்றும் தூசி ப்ரூஃப் ஆகும்.