

டெக்னோ பிராண்ட் ஏற்கனவே இந்தியாவில் அதன் ‘ஸ்பார்க் 10’ சீரிஸில் Spark 10 5ஜி மற்றும் ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது இந்த சீரிஸை சர்வதேச சந்தையில் விரிவுபடுத்தி, புதிய Tecno Spark 10 4G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் போன் தற்போது பிலிப்பைன்ஸில் 7 ஆயிரம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .
Tecno spark 10 – விவரக்குறிப்புகள்
- 6.6″ HD+ டிஸ்ப்ளே
- 90Hz புதுப்பிப்பு வீதம்
Tecno Spark 10 4G ஃபோன் 720 x 1612 பிக்சல்கள் அடர்த்தி கொண்ட 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்பட்டுள்ளது. திரையானது 90Hz புதுப்பிப்பு விகிதத்தில் இயங்கும் LCD பேனலில் உருவாக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளேவின்ன் மூன்று விளிம்புகள் குறைவாக உள்ளது மற்றும் கீழே ஒரு பெரிய chin பகுதி உள்ளது. திரையின் மேற்புறத்தில் ‘U’ வடிவ வாட்டர் டிராப் நாட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.
மெமரி
- 8ஜிபி நீட்டிக்கப்பட்ட ரேம்
- MediaTek Helio G37
டெக்னோ ஸ்பார்க் 10 4ஜி ஃபோன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மூலம் MediaTek Helio 37 ஆக்டாகோர் செயலி மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மொபைல் ஃபோன் 8ஜிபி நீட்டிக்கப்பட்ட ரேம் தொழில்நுட்பத்துடன் வருகிறது. அதாவது போனின் உள்ளே இருக்கும் 8ஜிபி பிசிகல் ரேமுடன் 8ஜிபி விர்சுவல் சேர்ந்து மொத்தத்தில் 16ஜிபி ரேம் இந்த மொபைலுக்கு சக்தியளிக்கிறது.
கேமரா
- 50MP பின்புற கேமரா
- 8MP செல்ஃபி கேமரா
Tecno Spark 10 4G ஸ்மார்ட்போன் புகைப்படம் எடுப்பதற்கு இரட்டை பின்புற கேமராவை கொண்டுள்ளது. 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை லென்ஸுடன் வரும் போனின் பின் பேனலில் LED ஃபிளாஷ் கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக டூயல் ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
பேட்டரி & சார்ஜிங்
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5,000mAh பேட்டரி
Tecno Spark 10 4G ஃபோன் பவர் பேக்கப்பிற்காக 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. புதிய டெக்னோ ஃபோன் அதன் பெரிய பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. டெக்னோ ஸ்பார்க் 10 4ஜி இரட்டை சிம் ஃபோன் ஆகும், இது 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் NFC-ஐக் கொண்டுள்ளது.
டெக்னோ ஸ்பார்க் 10 விலை
டெக்னோ ஸ்பார்க் 10 4ஜி போன் பிலிப்பைன்ஸில் ஒற்றை நினைவக வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் சேமிப்பு உள்ளது. Spark 10 4G விலை $90 ஆகும். இது இந்திய மதிப்பில் ரூ.7,400 ஆகும். இந்த போன் META Black, META Blue மற்றும் META White வண்ணங்களில் வெளியாகி இருக்கிறது.








