WhatsAppல் இப்போது HD தர புகைப்படங்களை அனுப்பலாம். விரைவில் HD வீடியோவும் அனுப்பலாம்.

Highlights

  • இப்போது HD தரத்தில் புகைப்படங்களை அனுப்ப WhatsApp உதவுகிறது.
  • இதுவரை ​சேமிப்பிடத்தை மிச்சப்படுத்தவும், குறைவான டேட்டாவைப் பயன்படுத்தவும் வாட்ஸ்அப்பில் புகைப்படத் தரம் சுருக்கப்பட்டது. 
  • விரைவில் HD தரத்தில் வீடியோவை அனுப்பும் வசதியும் வர இருக்கிறது.

 

HD தரத்தில் புகைப்படங்களை அனுப்பும் திறனை வாட்ஸ்அப்  சில காலமாக சோதித்து வருகிறது. Meta CEO Mark Zuckerberg இப்போது இந்த WhatsApp அம்சம் உலகளவில் வெளிவரத் தொடங்கும் என்றும், வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கூடுதலாக, HD வீடியோக்களை அனுப்பும் திறனும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இப்போது வரை, whatsapp நாம் அனுப்பும் புகைப்படத்தின் தரத்தை சுருக்கி வருகிறது. அதனால் சேமிப்பக இடம் குறையும். மேலும் புகைப்படங்கள் வேகமாகப் பகிரப்படும். ஆனால் இப்போது நாம் விரும்பும் தரத்தில் புகைப்படங்களை அனுப்ப முடியும்.

வாட்ஸ்அப்பில் HD தரமான புகைப்படங்களை அனுப்பவும்

  • WhatsApp இன்னும் SD (Standard Quality) தரத்தை இயல்புநிலை அமைப்பாக வைத்திருக்கும். ஆனால் புகைப்படங்களை அனுப்பும் முன் HD விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
  • அம்சம் வந்தவுடன், புகைப்படத்தின் தரத்தை மாற்ற நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய ‘HD’ விருப்பத்தை மேலே காண்பீர்கள்.
  • நீங்கள் இதைத் தேர்ந்தெடுத்தால், புகைப்படம் HD தரத்தில் அனுப்பப்படும்; இல்லையெனில் அது முந்தைய SD தரத்தைக் கொண்டிருக்கும்.
  • குறைந்த இன்டர்நெட் கனெக்டிவிட்டியில் புகைப்படங்களை HDயில் சேமிக்கலாம் அல்லது சேமிக்காமல் இருக்கும் வசதியையும் WhatsApp வழங்குகிறது. புகைப்படங்களின் கீழ் இடதுபுறத்தில் HD வாட்டர்மார்க் இருக்கும்.
  • வாட்ஸ்அப்பில் HD தரத்தில் புகைப்படங்களை அனுப்பும் வசதி பெரும்பாலான மொபைல்களுக்கு வந்துவிட்டது. மீதமுள்ளவருக்கும் வரும் வாரங்களில்  சென்றடையும். இதனையடுத்து விரைவில் எச்டி தரத்தில் வீடியோக்களை கொண்டு வர உள்ளதாகவும் நிறுவனம் உறுதி செய்துள்ளது . இந்த அம்சம் Android மற்றும் iOS இல் உள்ள பீட்டா சோதனையாளர்களுக்கும் கிடைக்கிறது.

WhatsApp HD தரமான புகைப்படங்கள்: தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

இருப்பினும், புகைப்படத்தின் தரம் சிறப்பாக இருந்தாலும், அது அசல் தெளிவுத்திறனாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருவித சுருக்கம் இருக்கும், ஆனால் அது நிச்சயமாக அசல் கோப்புக்கு அருகில் இருக்கும். மேலும், எல்லா புகைப்படங்களும் HD தரத்தில் அனுப்பப்படாது. WABetaInfo இன் படி, “சுருக்கப்பட்ட படத்தின் தரம் உயர் தரத்தில் இருந்து கணிசமாக வேறுபடவில்லை என்றால், அல்லது புகைப்படம் பெரிய அளவில் இல்லை என்றால், HD விருப்பம் தோன்றாது. அதாவது மேலே இருக்கும் ‘HD’ என்ற குறியீடு வராது. அளவில் பெரிய புகைப்படத்தை அட்டாச் செய்யும்போது மட்டுமே இந்த குறியீடு தோன்றும்.