பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததை அடுத்து இவர்களது திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா இவர்களது திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவர்களது திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ஒளிப்பரப்பு செய்வதாக தெரிவித்திருந்தது. இதன் பொறுப்பு பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் இவர்களது திருமணத்தில் யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணப் புகைப்படங்களை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் அவர்களது திருமண வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது.
சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக வதந்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.





