இது வேற எந்த ஸ்மார்ட்வாட்சிலும் இல்ல!


Oppo நிறுவனம் விரைவில் Oppo Watch 3 எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஒப்போ ஸ்மார்ட்வாட்ச் OWW211, OWW212 மற்றும் OWW213 என மூன்று விதமான மாடல்களில் வரும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒப்போ வாட்ச் 3-ல் அதிகமான ஸ்கிரீன் டூ பாடி ரேசியோ (Screen to body ratio) இருக்கும் எனவும், மைக்ரோ கர்வுடு ஸ்கொயர் டிஸ்ப்ளேவை (micro curved square display) கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் மிக மெல்லிய பெசில்களுடன் கூடிய செவ்வக வடிவிலான டிஸ்ப்ளே இடம்பெற்றிருக்கும் எனத் தெரிகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கருப்பு, சில்வர், அடர் சாம்பல், மற்றும் லைட் கோல்டு ஆகிய நான்கு வண்ணங்களில் வெளிவர இருக்கிறது. இதில் 2 மாடல்களில் 42 mm டயலும், ஒரு மாடலில் மட்டும் 46 mm டயலுடம் இடம்பெற்றிருக்கும்.

சமீபத்திய தகவல்படி இந்த ஸ்மார்ட்வாட்சில் ஸ்நாப்டிராகன் W5 Gen 1 சிப் (Snapdragon W5 Gen 1 chip) இடம்பெற்றிருக்கும் எனக் கூறப்படுகிறது. எனில், இந்த சிப் உடன் வரும் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆக ஒப்போ வாட்ச் 3 இருக்கும். இது வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்படஇருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.