சமீப காலமாக சாம்சங் நிறுவனம், ஆபர்களை அள்ளி தருகிறது. ஏனெனில் சமீபத்தில் தான் இந்நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்21 FE ஸ்மார்ட்போனின் மீது தாறுமாறான சலுகைகளை அறிவித்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி வாட்ச் 4 ஸ்மார்ட் வாட்ச்சின் விலையும் குறைக்கப்பட்டது. தற்போது ஏற்கனவே விற்பனையில் பட்டையை கிளப்பும் சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி (Samsung Galaxy F23 5G) மொபைலுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.
இந்த மொபைல் கடந்த மார்ச் மாதம் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமாகி முழுதாக 4 மாதங்கள் ஆகவில்லை; அதற்குள் இதன் மீது ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மற்ற F சீரீஸ் ஸ்மார்ட்போன்களை போலவே, இதுவும் நல்லபடியே விற்பனை ஆகி கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தான் கேலக்ஸி எஃப்23 5ஜி மீது திடீர் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது!
விலை எந்த அளவு குறைக்கப்பட்டுள்ளது?
Samsung Galaxy F23 5G ஸ்மார்ட்போனின் மீது ரூ.1,500 ‘ப்ரைஸ் கட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது மற்றும் அது இரண்டுமே விலை குறைப்பைக் கண்டுள்ளன!
பழைய விலை vs புதிய விலை
Samsung Galaxy F23 5G ஆனது இரண்டு ஸ்டோரேஜ் வகைகளின் கீழ் அறிமுகமானது. அது 4GB + 128GB மற்றும் 6GB + 128GB ஆகும். இவைகள் முறையே ரூ.17,499 மற்றும் ரூ.18,499 க்கு வெளியாகின. தற்போது இந்த 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலையிலும் ரூ.1,500 குறைக்கப்பட்டுள்ளது. ஆக வாடிக்கையாளர்கள் இப்போது 4ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.15,999 க்கு வாங்கலாம், அதே சமயம் 6ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.16,999 க்கு வாங்கலாம்.
விலைக்குறைப்பு மட்டுமல்ல.. பேங்க் ஆபரும் இருக்கு!
Galaxy F23 5G, Forest Green, Aqua Blue மற்றும் Cooper Blush என்கிற 3 நிறத் தேர்வுகளில் கிடைக்கிறது. இதற்கு வெறும் விலைக்குறைப்பு மட்டும் அல்லாது, சில வங்கி சலுகைகளும் கிடைக்கிறது. ஒருவேளை நீங்களொரு ஐசிஐசிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர் என்றால், உங்களுக்கு ரூ.1,000 என்கிற உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இதனுடன், வாடிக்கையாளர்கள் ரூ.1665 முதல் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களையும் பெறுவார்கள்.
இந்த மொபைல் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ சப்போர்ட் செய்யும் 6.6-அங்குல FullHD+ TFT டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது 4ஜிபி / 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடனான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 750G SoC மூலம் இயங்குகிறது. மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி இதன் ஸ்டோரேஜை 1டிபி வரை நீட்டிக்க முடியும். இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.
இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இருக்கிறது. அதில் 50MP மெயின் சென்சார் + 8MP அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2MP மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்ஃபி கேமரா இருக்கிறது. இதன் ரியர் கேமரா செட்டப் ஆனது 30fps இல் 4K வீடியோ பதிவு மற்றும் 480fps வரை ஸ்லோ-மோஷன் பதிவை ஆதரிக்கிறது.
Samsung Galaxy F23 5G ஆனது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, இது 5G (12 பேண்ட்ஸ்), டூயல் சிம் ஸ்லாட்டுகள், யூஎஸ்பி டைப்-C, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் என்எஃப்சி (NFC) போன்றவைகளை வழங்குகிறது. கடைசியாக இதன் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது; சுவாரசியமாக இதில் ஃபேஸ் அன்லாக் ஆதரவும் உள்ளது.
எனக்கு மொபைல் பேட்டரி லைஃப் தான் மிகவும் முக்கியம் என்றால்.. ஏராளமான 5G பேண்டுகளை ஆதரிக்கும் ஒரு ஸ்மார்ட்போனை ரூ.18கே பட்ஜெட்டின் கீழ் வாங்க வேண்டும் என்றால்… சரியான நேரத்தில் லேட்டஸ்ட் சாப்ட்வேர் அப்டேட்கள் கிடைக்க வேண்டும் என்றால்… Galaxy F23 5G ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்; அதிலும் 6ஜிபி ரேம்-ஐ தேர்வுசெய்வது இன்னும் நல்லது! ஒருவேளை நீங்கள் டிஸ்ப்ளே மற்றும் கேமராக்கள் மீது அதிக கவனம் செலுத்துபவராக இருந்தால் வேறு ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ளலாம்!






