Realmeயின் புதிய வரவுகள்!

பேட் எக்ஸ்
Realme நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் புதிய 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. அதாவது ரியல்மி 10 சீரிஸ் உடன் 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகமாக இருக்கிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த ஸ்மார்ட்போன் விற்பனைத் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

ரியல்மி ஸ்மார்ட்போன்கள் பொதுவாக கேமிங் பிரியர்களை மையமாக வைத்து இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் பெரும்பாலான ரியல்மி ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் மேம்பட்ட அம்சங்களோடு தனித்துவ வடிவமைப்பில் வெளியாகும். அதன்படிதான் வரவிருக்கும் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியான தகவலின்படி, புதிய ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.10,000 முதல் ரூ.15,000 விலைப் பிரிவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. Realme India CEO மாதவ் ஷெத் பகிர்ந்த தகவல் Realme India CEO மாதவ் ஷெத் பகிர்ந்த தகவல் ரியல்மி இந்த ஆண்டு இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் ரியல்மி 10 சீரிஸ் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போனும் அடங்கும் என Realme India CEO மாதவ் ஷெத் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

பட்ஜெட் விலையில் 5G போன்

ரியல்மி நிறுவனம் குறைந்தது நான்கு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் என சிஇஓ மாதவ் ஷெத் கூறினார். இதில் 5ஜி ஸ்மார்ட்போனும் அடங்கும். இது ரூ.10,000 – ரூ.15,000 விலைப் பிரிவில் இருக்கும் என்றார். “குறிப்பாக இந்தியாவில் 5ஜி அறிமுகத்திற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கூடுதல் அம்சங்களோடு இது அறிமுகமாகும்” என ரியல்மி சிஇஓ கூறினார்.

விரைவில் ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் 2-3 புதிய வேரியண்ட்களில் அறிமுகமாகும் என்பதை மாதவ் ஷெத் வெளிப்படுத்தினார். வரவிருக்கும் ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் பகிரப்படும் என குறிப்பிட்டார். இதன்மூலம் ரியல்மி நிறுவனம் தரப்பில் இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் அதிகப்படியான தயாரிப்புகள் வெளி வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.


ரியல்மி மானிட்டர்

ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் என பல கேட்ஜெட்களை அறிமுகம் செய்த ரியல்மி நிறுவனம் தற்போது மானிட்டர் பிரிவில் களமிறங்கி இருக்கிறது. இதன் பெயர் ரியல்மி ஃப்ளாட் மானிட்டர் (Realme Flat Monitor) ஆகும். இது Full HD தெளிவுத்திறன் மற்றும் உயர் புதுப்பிப்பு வீத (refresh rate) ஆதரவைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.18,999 ஆக இருக்கிறது. இந்த LED மானிட்டர் ஆனது ஒற்றை கருப்பு நிறத்தில் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 23.8 அங்குல அளவுடன் இருக்கிறது.
இதன் மேற்புற மூன்று பக்கங்களிலும் மெல்லிய பெசல்கள் இருக்கிறது. இந்த மானிட்டர் முழு எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) தீர்மானத்துடன், 75 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் ரேட் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.

அதேபோல் ரியல்மி சமீபத்தில் பேட் எக்ஸ் என்ற புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது. ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் மற்றும் மூன்றாவது டேப்லெட் ஆன ரியல்மி பேட் எக்ஸ், ஸ்னாப்டிராகன் 695 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 5G வசதியுள்ள Realme நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆகும். இதில் 11-இன்ச் WUXGA+ ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, குவாட் ஸ்பீக்கர் சிஸ்டம், 13 மெகாபிக்சல் ரியர் கேமரா, 105 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ (field of view) உடனான 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் செல்பி கேமரா, 8340mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் 4GB RAM + 64GB வேரியண்ட் ஆனது ரூ.25,999 எனவும் அதேபோல் 5G வேரியண்ட்டின் 6GB RAM + 128GB ஆப்ஷனின் விலை ரூ.27,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.