Infinix, இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலான Infinix Hot 12 Pro டிவைஸ் மிரட்டலான அம்சங்களுடன் குறைத்த விலையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின் படி, இந்த Infinix Hot 12 Pro ஸ்மார்ட்போன் டிவைஸ் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்த போனை பிளிப்கார்ட் வழியாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தும் வகையில் புதிய விளம்பரத்தையும் ப்ளிப்கார்ட் நிறுவியுள்ளது.
திரை
இது மிகவும் குறைந்த விலையில் HD+ தரத்துடன் கூட 6.6′ அங்குல அளவில், 90Hz டிஸ்பிளேவுடன் வருகிறது. கூடுதலாக, இந்த டிஸ்பிளே 180Hz டச் சாம்ப்ளிங் வீதத்தைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 128ஜிபி UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் 128ஜிபி UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரவிருக்கும், இந்த புதிய Infinix Hot 12 Pro ஸ்மார்ட்போன் ஆனது, 8GB ரேம் மாடலாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் 50MP கொண்ட டூயல் கேமரா அமைப்புடன் வருகிறது.
Infinix Hot 12 Pro விலை என்ன?
இந்த புதிய Infinix Hot 12 Pro ஸ்மார்ட்போன் தோராயமாக ரூ.10,000 விலை முதல் ரூ.13,990 என்ற விலையில் இருக்கலாம் எனத் தெரிகிறது. Infinix Hot 12 Pro பற்றிய சில முக்கிய விவரங்களும் அதன் மைக்ரோசைட்டில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் 90Hz refresh rate கொண்ட HD+ மற்றும் 180Hz Touch sampling உடைய 6.6′ அங்குல டிஸ்ப்ளேவுடன் வருவது உறுதியாகியுள்ளது. Infinix Hot 12 Pro ஸ்டோரேஜ் 128ஜிபி உள் UFS 2.2 சேமிப்பு மற்றும் 8ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்பதை முன்பே பார்த்தோம், இந்த ஸ்மார்ட்போனின் இன்டர்னல் ஸ்டோரேஜை பயன்படுத்தி இதன் ரேமை 13ஜிபி வரை அதிகரிக்கக் கூடிய ஆதரவையும் இன்பினிக்ஸ் வழங்கியுள்ளது.
வசதிகள்
இந்த Infinix Hot 12 Pro ஸ்மார்ட்போன் டிவைஸ் 18W பாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்ட 5,000mAh பேட்டரி உடன் வரும். கூடுதலாக, இது USB Type-C போர்ட்டைக் கொண்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 12 ப்ரோவின் மைக்ரோசைட்டின் படத்தில், கேமரா அமைப்பிற்கு அருகில், பின்புற பேனலில் ஒரு கைரேகை ஸ்கேனர் உள்ளது. Infinix Hot 12 Pro ஸ்மார்ட்போன் XOS 10 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்குகிறது.
இந்த புதிய Infinix Hot 12 Pro ஸ்மார்ட்போன் டிவைஸ், Infinix Hot 12 Play மாடலுக்கு அடுத்தபடியாக 12 சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த போனில் பல சிறப்பான அம்சங்கள் குறைந்த விலையில் கிடைக்க இருப்பதனால், Infinix Hot 12 Pro மொபைலுக்கு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.






