
இந்தியாவில் சமீபத்தில் நடந்த 5ஜி ஸ்பெக்டரம் ஏலத்தில் ஏர்டெல், ஜியோ, விஐ மற்றும் அதானி குழுமம் ஆகியவை பங்கேற்றன. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை ஜியோ, ஏர்டெல், விஐ உள்ளிட்ட நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பல இடங்களில் 5ஜி சோதனை முழுவீச்சில் மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வோடபோன் ஐடியா (Vi) பெங்களூரில் உள்ள MG சாலை மெட்ரோ நிலையத்தில் 5G சோதனை நடத்தி இருக்கிறது. இதுகுறித்த டெலிகாம் தகவலின்படி, விஐ நடத்திய 5ஜி சோதனையில் 1.2Gbps பதிவிறக்கம் வேகம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மட்டுமின்றி புது டெல்லி சர்வதேச விமான நிலையம், குஜராத்தில் உள்ள காண்ட்லா துறைமுகம் மற்றும் போபால் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நிறுவனம் சோதனைகளை நடத்தியது.
சோதனைகளை நடத்துவதற்கான ஸ்மார்ட் செல்கள் மற்றும் ஏரியல் ஃபைபர்களை பொருத்துவதற்கு நிறுவனம் சாலையோர பொருட்களை பயன்படுத்தி இருக்கிறது. அதாவது டிராஃபிக் லைட்ஸ், பேருந்து நிலையம், மின் கம்பங்கள் உள்ளிட்டவைகளை விஐ பயன்படுத்தி இருக்கிறது. விஐ நடத்திய 5ஜி சோதனையில் ஸ்மார்ட்போன் மூலம் 1.2ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 2021 ஆம் ஆண்டில் விஐ புனேவில் நடத்திய 5ஜி சோதனையில் உச்ச வேகத்தை பதிவு செய்தது. அதாவது விஐ நடத்திய இந்த 5ஜி சோதனையில் 3.7Gbps வேகம் பதிவு செய்தது. அதேபோல் குஜராத்தின் காந்திநகரில் நடத்தப்பட்ட சோதனையில் 1.5Gbps பதிவிறக்க வேகத்தை நிறுவனம் பதிவு செய்தது. நோக்கியா E-band MW நெட்வொர்க்கை 5G சோதனைக்கு பயன்படுத்தியதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா ஒரே இடத்தில் 5ஜி சோதனையை நடத்தி இருக்கிறது. பெங்களூரு MG சாலை மெட்ரோ நிலையத்தில் 5G சோதனையை வோடபோன்-ஐடியா நடத்தியது என்ற தகவலை பார்த்தோம். அதே நேரத்தில் பெங்களூரு எம்ஜி ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஜியோவும் 5ஜி சோதனையை நடத்தியது.
பைலட் திட்டத்தின் கீழ் 5ஜி சோதனை பைலட் திட்டத்தின் கீழ் 5ஜி சோதனை இதுகுறித்த BMRCL இன் ட்வீட் படி, பெங்களூரு மெட்ரோ கார்ப்பரேஷன் ஜியோவுடன் இணைந்து ஒரு பைலட் திட்டத்தின் கீழ் 5ஜி நெட்வொர்க்கை சோதனை செய்கிறது. ஜியோவின் 5ஜி நெட்வொர்க் ஆனது தற்போது பெங்களூரு எம்ஜி ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தின் 200 மீட்டர் சுற்றளவில் கிடைக்கிறது. அதேபோல் எம்ஜி ரோடு மெட்ரோ நிலையத்தில் வைத்துள்ள ஜியோ 5ஜி போர்டையும் BMRCL ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
ஜியோ 5ஜி நெட்வொர்க் வேகம் அதிகாரப்பூர்வ ட்வீட்டின் படி, ஜியோ 5ஜி இன் உச்ச பதிவிறக்க வேகம் 1.45Gbps ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 65Mbps பதிவேற்ற வேகத்தையும் பதிவு செய்திருக்கிறது. பெங்களூருவில் உள்ள ஜியோ 5ஜி நெட்வொர்க் வேகமானது 4ஜி நெட்வொர்க்கை விட குறைந்தது 10 மடங்கு அதிகம் ஆகும். 4ஜி வேகத்தை விட பல மடங்கு அதிகம். 4ஜி வேகத்தை விட பல மடங்கு அதிகம் இருப்பினும் பதிவிறக்க வேகத்தை ஒப்பிடுகையில் பதிவேற்ற வேகம் ஆனது சற்று குறைந்ததாகவே இருக்கிறது. இது சோதனை கட்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சோதனை கட்டமே இத்தனை வேகமாக இருந்தால் அதிகாரப்பூர்வ அறிமுகத்தின் போது இணைய வேகம் அதீத அளவில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகவேகத்தில் 5ஜி சேவையை பயன்படுத்த தயாராக இருக்கும் பட்சத்தில் கூடுதல் பணம் செலவழிக்கவும் தயாராக இருக்க வேண்டும். அதாவது 4ஜி நெட்வொர்க் விலையை விட குறைந்தது 10% அதிகமாக 5ஜி சேவைக்கு செலவழிக்க வேண்டும் என கூறப்படுகிறது. இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால், தினசரி 2 ஜிபி டேட்டா என்ற வீதத்தில் மாதாந்திர திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்கள் தற்போது செலவு செய்யும் பணத்தை விட கூடுதலாக ரூ.300 செலுத்த வேண்டியது இருக்கும் என கணிக்கப்படுகிறது.





