அறிமுகமானது நோக்கியா 8120 4G


நோக்கியா 8120 4G என்ற போனை அறிமுகம் செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். இந்த நோக்கியா 8120 4ஜி போன் விண்டேஜ் ஃபீச்சர் போனால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு அனைவருக்கும் பிடிக்கும் என்றே கூறலாம். அதேபோல் 4ஜி வோல்ட்இ ஆதரவைக் கொண்டு இந்த நோக்கியா போன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வசதிகள்

புதிய நோக்கியா 8120 4ஜி போன் 320 x 240 பிக்சல்ஸ், 2.8-இன்ச் QVGA டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. எம்பி3 பிளேயர், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, டார்ச்லைட் மற்றும் சில அசத்தலான கேம் வசதிகளுடன் இந்த பீச்சர் போன்வெளிவந்துள்ளது. அதேபோல் 48எம்பி ரேம் மற்றும் 128எம்பி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா 8120 4ஜி போன். குறிப்பாக ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை இதன் மெமரியை நீட்டித்துக் கொள்ள முடியும்.

1ஜிகாஹெர்ட்ஸ் Unisoc T107 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது இந்த நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன். இதில் 1450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது நீண்ட நேரம் பேட்டரி பேக் அப் கிடைக்கும். இந்த புதிய நோக்கியா போனில் S30+ OS வசதி உள்ளது. மேலும் இந்த போன் பின்பக்கத்தில் VGA கேமரா, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக்,ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட்இ, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

சிவப்பு மற்றும் நீல நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன், ரூ.3,999-விலையில் அமேசான்இந்தியா மற்றும் நோக்கியா ஸ்டோர்களில் கிடைக்கிறது.
அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா டி10 (Nokia T10) மாடலை அறிமுகம் செய்தது. அதன் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Nokia T10

நோக்கியா டி10 டேப்லெட் ஆனது 8- அங்குல HD டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. 800 x 1280 பிக்சல்ஸ், 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect ratio) உடன் வெளியாகி இருக்கிறது.
நோக்கியா டி10 டேப்லெட் மாடலில் Unisoc T616சிப்செட் உள்ளது. இதனால் இதன் செயல்திறன் நன்றாக இருக்கும். மேலும் நோக்கியா டி10 ஆனது வைஃபை மற்றும் வைஃபை + 4ஜி எல்டிஇ என இரண்டு வகைகளில் கிடைக்கும். புதிய நோக்கியா டி10 டேப்லெட் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 (OS) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளியாகி இருக்கிறது.

நோக்கியா டி10 டேப்லெட் 8MP பின்பக்க கேமரா மற்றும் 2MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. கூடவே LED Flash மற்றும் பேஸ் அன்லாக் (face unlock) போன்ற அம்சங்களும் இருக்கிறது.
புதிய நோக்கியா டி10டேப்லெட் 5250mAh பேட்டரியுடன் வெளிவந்துள்ளது. இதை சார்ஜ் செய்ய 10W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. கூடவே OZO பிளேபேக் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. இந்த நோக்கியா டி10 டேப்லெட் இந்திய மதிப்பில் ரூ.12,150 என்ற ஆரம்ப விலைக்குக் கிடைக்கிறது.