அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேலின் போது பல வகையான பொருட்கள் மீது விலைக்குறைப்புகள், தள்ளுபடிகள், மற்றும் சலுகைகள் கிடைக்கிறது. இருந்தாலும் வழக்கம் போல் மொபைல் போன்களுக்கு சற்று அதிகமாகவே சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.
அதில், OnePlus, Apple, Xiaomi, Redmi, Tecno, Samsung, Realme, iQoo மற்றும் Oppo போன்ற நிறுவனங்களிடம் இருந்து என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்கிற பட்டியலைப் பார்க்கலாம்.

SBI, ICICI, Bajaj Finserv, Amazon Pay Later- மூலம் கிடைக்கும் கூடுதல் சலுகைகள்!
வழக்கமான சலுகைகளுடன் சேர்த்து, அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் இஎம்ஐ வழியாக கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் EMI கார்டு, Amazon Pay ICICI கிரெடிட் கார்டு, Amazon Pay Later போன்ற விருப்பங்களைத் தேர்வு செய்தால் நோ காஸ்ட் EMI (No cost EMI) விருப்பங்களையும் பெறலாம். இதுதவிர, அமேசான் கூப்பன்களை கொண்டு ரூ.7,000 வரையிலான கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.6,000 வரை எக்ஸ்சேஞ் வேல்யூ (Exchange value)-வையும் பெறலாம்.
OnePlus சலுகைகள்!
OnePlus 9 Series ஸ்மார்ட்போன்கள் ஆனது ரூ.37,999 முதல் கிடைக்கிறது. இதன் மேல் ரூ.15,000 வரை தள்ளுபடி, ரூ.5,000 வரையிலான கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் SBI வங்கி சலுகைகள் கிடைக்கிறது.
OnePlus 10R ஆனது 6 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் EMI உடனாக ரூ.4,000 என்கிற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் மற்றும் வங்கி சலுகைகளை சேர்த்தால் கூடுதலாக ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும். OnePlus 10 Pro 5G மீது ரூ.5000 கூப்பன் தள்ளுபடி, ரூ.6000 எஸ்பிஐ தள்ளுபடி மற்றும் 9 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI மற்றும் ரூ.5,000 எக்ஸ்சேஞ் போன்ற சலுகைகள் கிடைக்கிறது. இதேபோல OnePlus Nord CE 2 Lite 5G ஆனது ரூ.18,999 க்கும், OnePlus Nord CE 2 5G ஆனது ரூ.23,999 க்கும் கிடைக்கிறது.
Apple iPhone சலுகைகள்!
ஐபோன்களை வாங்க விரும்புவார்கள் iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max மற்றும் iPhone 13 Pro Max ஆகியவற்றின் மீது ரூ.15,000 வரை தள்ளுபடியைப் பெற முடியும்.
Xiaomi, Redmi ஆபர்கள்?
Redmi 9 சீரிஸ் வெறும் ரூ.6,999 முதல் கிடைக்கிறது. Redmi Note 10T 5G, Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max மற்றும் Redmi Note 10S மாடல்களை உள்ளடக்கிய ரெட்மி நோட் 10 சீரீஸ் ஆனது கூடுதல் வங்கி தள்ளுபடியுடன் வெறும் ரூ.10,999 முதல் கிடைக்கும். சமீபத்தில் அறிமுகமான Redmi K50i 5G ஆனது ரூ.25,999 என்ற விலைக்குக் கிடைக்கும். இதன் மீது எக்ஸ்சேஞ்ச் சலுகை, வங்கி தள்ளுபடி மற்றும் நோ காஸ்ட் EMI சலுகைகளும் கிடைக்கும். இதே போல Xiaomi 11 Lite ஆனது ரூ.23,999 க்கும் Xiaomi 11T Pro ஆனது ரூ.35,999 க்கும் கிடைக்கும்.
Tecno சலுகைகள்!
டெக்னோ ஸ்மார்ட்போன்களின் மீது 30 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமேசான் சலுகை விற்பனையில், டூயல் ரியர் கேமராக்களைக் கொண்டிருக்கும் Tecno Pop 5 LTE ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ரூ.6,599 க்கு வாங்கலாம்.
Samsung சலுகைகள்!
சாம்சங் நிறுவனத்தின் மொத்த எம் சீரிஸ் மாடல்களின் மீதும் சலுகைகள் கிடைக்கிறது. குறிப்பாக Samsung Galaxy M33 5G மீது ரூ.10,000 வரை தள்ளுபடியும் மற்றும் Samsung M32 மீது ரூ.5,000 தள்ளுபடியும் கிடைக்கும்.
iQOO சலுகைகள்!
iQOO ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.10,000 வரை தள்ளுபடி கிடைக்கும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட iQOO Neo 6 5G ஆனது ரூ.3,000 என்கிற கூடுதல் தள்ளுபடி சலுகையுடன் ரூ.29,999 க்கு கிடைக்கும். iQOO Z6 Pro ஆனது ரூ.23,999 க்கும், iQOO Z6 5G ஆனது கூப்பன் மற்றும் வங்கி தள்ளுபடிகளுடன் ரூ.14,999 க்கும் கிடைக்கிறது. இதேபோல iQOO 9 SE, iQOO 9 5G மற்றும் iQOO 9 Pro 5G உள்ளிட்ட ஃபிளாக்ஷிப் போன்களின் மீதும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Realme சலுகைகள்!
ரியல்மி போன்களின் மீது ரூ.7000 வரையிலான தள்ளுபடிகள் கிடைக்கும். Narzo 50 5G, Narzo 50 Pro மற்றும் Narzo 50A Prime போன்ற மாடல்கள் ரூ.11,499 முதல் கிடைக்கிறது.
Oppo சலுகைகள்!
Oppo A சீரீஸின் கீழ் ரூ.6500 வரையிலான தள்ளுபடியும், Oppo F சீரீஸின் கீழ் ரூ.5000 வரையிலான தள்ளுபடியும் கிடைக்கும்.
Vivo சலுகைகள்!
இந்த ஃப்ரீடம் விற்பனையின் போது Vivo ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.5000 வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.














