அறிமுகமானது மோட்டோரோலாவின் Moto G32


மோட்டோரோலா நிறுவனத்தின் ‘G’ சீரீஸின் கீழ், லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக Moto G32 இன்று (ஆகஸ்ட் 9, 2022) இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் அதன் விலையை விட அதிகமான வசதிகளை வழங்குகிறது என்றே கூறலாம். இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடனான 6.5-இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 SoC, 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 5000mAh பேட்டரி மற்றும் Android 12 OS போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டு இருக்கிறது.

மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனில் கிடைக்கும் மொபைல்களுக்கான திங்க்ஷீல்டு செக்யூரிட்டி சொல்யூஷன், தூசி & நீர் எதிர்ப்பிற்கான IP52 மதிப்பீடு, ஸ்போர்ட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு போன்ற அம்சங்கள் உங்களை கண்டிப்பாக கவர்ந்திழுக்கும்!

இரட்டை சிம் (நானோ) வசதியுடன் வரும் Moto G32 ஆனது நியர்-ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 OS மூலம் இயங்குகிறது. இதன் 6.5-அங்குல அளவிலான டிஸ்பிளேவானது ஒரு Full HD plus (1,080 x 2,400 பிக்சல்ஸ்) LCD டிஸ்பிளே ஆகும். இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோவுடன் (Aspect ratio) வருகிறது. இதில் 4GB RAM இருக்கிறது.

Moto G32 ஆனது 50 மெகாபிக்சல் ( f/1.8) மெயின் கேமரா + 8எம்பி (f/2.2) அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி (f/2.4) மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி (f/2.4) கேமரா உள்ளது.

மோட்டோ G32 ஆனது 64GB அளவிலான சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்க முடியும். கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, டூயல்-பேண்ட் வைஃபை, 4ஜி LTE, ப்ளூடூத் v5.2, 3.5mm ஹெட்ஃபோன் போர்ட் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போன்றவைகள் உள்ளன.

ஃபேஸ் அன்லாக் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் ரீடர் உடன் வரும் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் ஆனது 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் (Turbo power fast charging) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதில் 5,000mAh பேட்டரியும் உள்ளது. மேலும் மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் டூயல் மைக்ரோஃபோன்களும் உள்ளன.

இந்தியாவில் Moto G32 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.12,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மினரல் கிரே மற்றும் சாடின் சில்வர் என்கிற 2 நிறத் தேர்வுகளில், வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் Flipkart (பிளிப்கார்ட்) மற்றும் முன்னணி ஆஃப்லைன் அவுட்லெட்டுகளின் வழியாக விற்பனை செய்யப்படும்.

வாடிக்கையாளர்கள் HDFC பேங்க் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில், 10% உடனடி தள்ளுபடியை பெறலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.2,000 மதிப்பிலான ஜியோவின் கேஷ்பேக் சலுகை ஒன்றும் கிடைக்கிறது. இந்த கேஷ்பேக் ஆனது ரூ.549 ரீசார்ஜ் + Zee5 சேவையின் ஆண்டு சந்தாவின் மீதான ரூ.2,549 என்கிற தள்ளுபடியாகக் கிடைக்கும்.