அறிமுகமாகிறது விவோவின் பட்ஜெட் போன்!


விவோ நிறுவனம் இந்த மாதம் பல அசத்தலான புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் விவோ வி25 ப்ரோ எனும் 5ஜி ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளது

அதேபோல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி மலேசியாவில் விவோ Y35 4G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதனையடுத்து இந்த போன் இந்தியா மற்றும் பல நாடுகளில் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய விவோ போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

திரை

விரைவில் அறிமுகமாகும் விவோ Y35 4G ஸ்மார்ட்போன் ஆனது 6.58-அங்குல LCD டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். இந்த ஸ்மார்ட்போன் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் டிஸ்பிளேவை விட இதன் சிப்செட்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது விவோ.

சிப்செட் & இயங்குதளம்

மேலும் இந்த சிப்செட்-இன் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த விவோ Y35 4G ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரேம் & சேமிப்புத்திறன்

8GB RAM மற்றும் 128GB சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது விவோ Y35 4G ஸ்மார்ட்போன். இதன் சேமிப்புத்திறனை ஒரு Micro SD கார்டு மூலம் அதிகரித்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.

கேமரா

விவோ Y35 4G ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா (f/1.8) + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 16MP கேமராவும் இருக்கிறது.

வசதிகள்

இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கிறது. இதுதவிர இந்த போனில் கைரேகை ஸ்கேனர் வசதி கூட உள்ளது. 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஏ-ஜிபிஎஸ், சார்ஜ் செய்வதற்கான யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ Y35 4G. மேலும் இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இது தவிர, இந்த மாதம் இறுதியில் அறிமுகமாகும் விவோ வி25 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சற்று அதிக விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த விவோ வி25 ப்ரோ 5ஜி போன் ஆனது மீடியாடெக் Dimensity 1300 SoC சிப்செட் வசதியை கொண்டுள்ளது. மேலும் 6.56-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3D curved AMOLED டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 64எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்ஃபி கேமரா, 4830 எம்ஏஎச் பேட்டரி, 66W பிளாஷ் சார்ஜிங் வசதி போன்ற பல அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதேபோல் விவோ நிறுவனம் விரைவில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.