Redmi Note 11T Pro மற்றும் Redmi Note 11T Pro+ ஸ்மார்ட்போன்கள் இப்போது ‘மில்க் சால்ட் ஒயிட்’ என்ற நிறத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஷாவ்மி நிறுவனம் Weibo வழியாக இந்த தகவலை அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் முதலில் அட்டாமிக் சில்வர், மிட்நைட் டார்க்னஸ் மற்றும் டைம் ப்ளூ வண்ண விருப்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரெட்மி நோட் 11டி ப்ரோ மற்றும் நோட் 11டி ப்ரோ+ இப்போது, இது ஒரு புதிய வண்ண மாறுபாட்டை பெற்றுள்ளது. இந்த புதிய மாடலில் அம்சங்களில் புதிதாக எந்த வேறுபாடுகளும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ரெட்மி நோட் 11டி ப்ரோ மற்றும் நோட் 11டி ப்ரோ+ ஆகிய 2 ஸ்மார்ட்போன் மாடல்கள் இரண்டும் ஏறக்குறைய ஒரே சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. Redmi Note 11T Pro தொடர் 144Hz அம்சத்துடன் கூடிய 6.6′ அங்குல LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
விலை என்ன?
சீனாவில் Redmi Note 11T Pro ‘மில்க் சால்ட் ஒயிட்’ நிற போனின் விலை CNY 1,599 ஆக இருக்கிறது. இது இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 18,900 விலையில் தொடங்குகிறது. Redmi Note 11T Pro தொடரின் புதிய மாடல் இன்னும் Xiaomi இன் ஆன்லைன் ஸ்டோரில் பட்டியலிடப்படவில்லை. இந்த புதிய நிற Redmi Note 11T Pro மற்றும் Note 11T Pro+ இன் வகைகளுக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருந்தபோதும் நமக்குக் கிடைத்த தகவலின்படி, Redmi Note 11T Pro+ ஆனது தற்போது 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் அடிப்படை மாடலின் விலை CNY 1,999 ஆக இருக்கிறது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 23,600 விலையில் கிடைக்கும். மிட் ரேஞ் மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 26,000 ஆகும். இதன் டாப்-எண்ட் 512ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 28,300 விலையில் கிடைக்கிறது.
Redmi Note 11T Pro ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் மாடலின் விலை இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 18,900 விலையில் கிடைக்கிறது. இதன் மிட் ரேஞ் மாடலின் விலை இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 22,400 விலையில் கிடைக்கிறது. டாப்-எண்ட் வேரியண்ட் மாடலின் விலை இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 24,800 விலையில் வருகிறது.
சிறப்பம்சம்
Redmi Note 11T Pro+ ‘மில்க் சால்ட் ஒயிட்’ வண்ண வேரியண்ட் 2,460 x 1,080 பிக்சல்கள் அடர்த்தி கொண்ட 6.6′ அங்குல டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 144Hz அம்சத்துடன் கூடிய 270Hz டச் சாம்ப்ளிங் வீதத்துடன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் உடன் கூடிய வேபர் கூலிங் VC ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பேட்டரி
Redmi Note 11T Pro+ ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் Samsung ISOCELL GW1 பிரைமரி சென்சார் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5G, 4G LTE, Wi-Fi 6, புளூடூத் v5.3, GPS/A-GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவற்றைப் பெறுகிறது. இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் திறனுடன் 4,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பிரைட் வைட் மாடலுக்கு எந்தவிதமான வரவேற்பு இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






