போன் அதுதான்.. ஆனா பேரு வேற!

ரூ.11,000 பட்ஜெட்டில் இப்படி ஒரு ஸ்மார்ட்போனா என்று நம்மை ஆச்சரியப்படுத்தும் பேசுவது iQOO Z6 Lite ஸ்மார்ட்போனைப் பற்றித்தான் நாம் விரிவாக பார்க்க இருக்கிறோம். ஆனால் இது விவோ ஸ்மார்ட்போனின் ‘ரீபிராண்டட் வெர்ஷன்’ ஆகும். அதாவது, விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள iQOO Z6 Lite ஆனது கடந்த மாதம் அறிமுகமான Vivo T1x ஸ்மார்ட்போனின் “மறுபெயரிடப்பட்ட” மாடல் ஆக இருக்கும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இங்கே சுவாரசியம் என்னவென்றால், iQOO Z6 Lite ஆனது விவோ டி1எக்ஸ் போனை விட குறைவான விலைக்கு அறிமுகமாகும் என்பது தான்!

இந்தியாவில் iQOO Z6 Lite ஸ்மார்ட்போன் வருகிற செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாகலாம். அறிமுக தேதியில் கொஞ்சம் குழப்பம் இருந்தாலும் கூட, அம்சங்கள் மற்றும் விலை பற்றி எந்த குழப்பமும் இல்லை. ஏனென்றால், விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன் தான் ஏற்கனவே அறிமுகமாகி விட்டதே!

அம்சங்கள்

ஐக்யூ Z6 லைட் ஆனது ஆனது Qualcomm Snapdragon 680 ப்ராசஸர் உடனாக 6GB வரையிலான ரேம் மற்றும் 128GB அளவிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரலாம். அதாவது இது ஒரு 4G போனாக இருக்கும். டிஸ்பிளேவை பொறுத்தவரை, iQOO Z6 Lite ஆனது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் கூடிய 6.58-அங்குல அளவிலான FullHD LCD பேனலை கொண்டிருக்கலாம்.

கேமராக்கள் & பேட்டரி

கேமராக்களை பொறுத்தவரை, ட்ரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்டிருக்குமா அல்லது டூயல் கேமராக்கள் இருக்குமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஆனால் இது 50-மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, வீடியோ அழைப்புக்கும், புகைப்படம் எடுக்கவும் இதில் 8-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம்பெறலாம். மேலும் இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிங் வசதியோடு கூடிய 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் Z6 Lite ஆனது முன்னதாக அறிமுகமான Z6 ஸ்மார்ட்போனின் டோன்-டவுன் வெர்ஷன் ஆகவும் இருக்கும் என்பது போல் தெரிகிறது.

விலை

iQOO Z6 Lite ஆனது Vivo T1x ஸ்மார்ட்போனின் விலையை விட ரூ.500 முதல் ரூ.700 வரை குறைவான விலைக்கு விற்பனைக்கு வரலாம். அதாவது iQOO Z6 Lite ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலையானது சுமார் ரூ.11,499 ஆக இருக்கும். அறிமுக சலுகை மற்றும் வங்கிச் சலுகை போன்ற சலுகைகள் கிடைக்கும் பட்சத்தில், இது ரூ.10,000க்கு கூட கிடைக்கலாம். Vivo T1x ஸ்மார்ட்போன் ஆனது 2 வெவ்வேறு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் ரூ.11,999 க்கும் மற்றும் ரூ.14,999 க்கும் விற்பனையாகிறது. மேலும் iQOO Z6 Lite ஆனது Vivo T1x ஸ்மார்ட்போனை போலவே Gravity Black மற்றும் Space Blue என 2 வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.