அறிமுகமாகிறது ஒன்ப்ளஸ் நார்ட் 3

OnePlus ரசிகர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. காரணம், ஒன்பிளஸ் இந்த ஆண்டு அதன் Nord பிராண்டின் கீழ் பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதுதவிர இன்னும் சில தயாரிப்புகளை அறிமுகம் செய்யவும் இருக்கிறது.

சமீபத்தில் வெளியான அறிவிப்பின் படி, வரும் நாட்களில் OnePlus Nord 3 ஸ்மார்ட்போன், OnePlus Nord Watch, OnePlus Nord Band, போன்ற புதிய Nord பிராண்டட் தயாரிப்புகள் அறிமுகமாக இருக்கிறது என்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதேபோல், Nord பிராண்ட் கீழ் ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ் மற்றும் பிற Nord பிராண்டட் AIoT தயாரிப்புகளை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாகவும் டிப்ஸ்டர் முகுல் ஷர்மா தெரிவித்துள்ளார்.

புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்சில் என்ன எதிர்பார்க்கலாம்?

இந்த சாதனங்களின் வரிசையில், OnePlus Nord 3 ஸ்மார்ட்போன் மற்றும் வரவிருக்கும் OnePlus Nord வாட்ச் பற்றிய தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது. நமக்குத் தெரிந்த தகவலின் படி, OnePlus Nord 3 ஸ்மார்ட்போன் சாதனம், சில மாதங்களுக்கு முன்பு BIS தரவுத்தளத்தில் காணப்பட்டது.

டிஸ்பிளே

Nord 3 ஆனது Dimensity 8100 சிப்செட் மற்றும் 1080 x 2412 பிக்சல்களின் முழு HD+ தீர்மானம் கொண்ட 6.7′ அங்குல AMOLED டிஸ்பிளேவை கொண்டு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்பிளே 120Hz ரெப்பிரஷ் ரேட் உடன் வரலாம். தற்போது சந்தையில் இருக்கும் பெரும்பாலான OnePlus போன்களைப் போல் அல்லாமல், இந்த் மொபைல் பஞ்ச் ஹோல் கேமராவைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.

கேமரா

கேமராவைப் பொருத்தவரை, 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் ஸ்னாப்பருடன் இணைக்கப்பட்ட 50 மெகாபிக்சல் IMX766 முதன்மை சென்சார் இருப்பதாகத் தெரிகிறது. இதன் முன் பக்கத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, இந்த சாதனம் 12GB LPDDR5 ரேம் மற்றும் 256GB UFS 3.1 சேமிப்பகத்துடன் வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இது 150W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,500mAh பேட்டரியுடன் வரலாம்.

ஒன்பிளஸ் நார்ட் வாட்ச்

பிரபல டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவின் வெளியிட்ட தகவலின் படி, OnePlus Nord வாட்ச், OnePlus வாட்ச் போன்ற தோற்றத்தில் இருந்து மாறி, புதிய செவ்வக வடிவமைப்பை பெரும் என்று கூறப்படுகிறது. இது ஐந்து வெவ்வேறு வடிவமைப்புகளில் வரும் என்று தெரியவந்துள்ளது. Nord Watch ஆனது SpO2 சென்சார், இதயத் துடிப்பு கண்காணிப்பு மற்றும் ஸ்லீப் மானிட்டர் போன்ற அனைத்து கண்காணிப்பு அம்சங்களையும் கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

விலை

இது கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறத் தேர்வுகளில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இறுதியாக, இந்த புதிய நார்ட் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 5,000 முதல் ரூ. 8,000 விலைக்குள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. வரவிருக்கும் இந்த புதிய OnePlus Nord 3 ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இது 300 முதல் 400 டாலர் வரையிலான மதிப்பில் இருக்கலாம்.. மிக விரைவில் இதன் அறிமுகத் தேதி வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.