விரைவில் அறிமுகமாகிறது Poco M5

Poco M5 ஸ்மார்ட்போன் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி99 SoC மூலம் இயக்கப்படும் என்பது போக்கோ மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

எப்போது வெளியாகிறது?

Poco M5 வெளியீட்டு தேதியாக செப்டம்பர் 5 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலை போக்கோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போக்கோ நிறுவனத்தின் மற்றொரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக இது அறிமுகமாக இருக்கிறது. போக்கோ இந்தியாவின் யூடியூப் சேனல் மூலமாக இந்த வெளியீடு நேரலையில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

MediaTek Helio G99 SoC சிப்செட் ஆதரவு சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான போக்கோ, சமீபத்தில் ட்விட்டர் மூலமாக ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வதை உறுதி செய்தது. இந்த பதிவில் “G99” என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இந்த ஸ்மார்ட்போன் MediaTek Helio G99 SoC மூலம் இயக்கப்படும் என்பது ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இந்த போனின் விலை மற்றும் இதில் இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Poco M5 செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வு Poco இந்தியாவின் அதிகாரப்பூர்வ YouTube சேனல் மூலம் நேரலை செய்யப்படும். வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் பெயரையோ, இந்திய விலை பற்றியோ எந்த அறிவிப்பையும் Poco இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

சமீபத்தில் போகோ நிறுவனம் ஒரு எம் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக டீஸ் செய்திருந்தது. எனவே அது Poco M5 ஆக இருக்கலாம் என தகவல் வெளியானது. மேலும் பதிப்பில் “G99” என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் MediaTek Helio G99 SoC மூலம் இயக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது

விலை & வசதிகள்

இந்தியாவில் Poco M5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,000 என இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து வெளியாகியுள்ள தகவலை விரிவாகப் பார்க்கலாம். Poco M5 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தோடு வெளியாகிறது. இந்த ஸ்மார்ட்போனானது முழு எச்டி+ தெளிவுத்திறன் உடன் கூடிய 6.58 அங்குல LCD டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கும் என தகவல் தெரிவிக்கிறது. முன்னதாகவே குறிப்பிட்டது போல் இந்த ஸ்மார்ட்போன் MediaTek Helio G99 SoC இயக்கப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

இதேபோல் போக்கோ எம்5 ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5000mAh பேட்டரியோடு வெளியாகும் எனவும் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல் 5ஜி ஆதரவுடன் கூடிய Poco M5 மாடல் சற்று உயர்ந்த விலையுடன் எதிர்காலத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது “சிக்-லெதர்” போன்ற பின் பேனல் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. Poco M5 ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது. அதேபோல் டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி5 உள்ளிட்ட இணைப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது. அப்பொபொது இதன் முழு அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் துல்லியமாகத் தெரியவரும்.