சீனாவைச் சேர்ந்த Xiaomi இன் துணை பிராண்ட்டான Redmi இப்போது இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வரிசையில் Redmi A1 Plus என்ற பட்ஜெட் விலை போனை நிறுவனம் Redmi 11 Prime மற்றும் Redmi 11 Prime 5G உடன் அறிமுகம் செய்ய இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.
ஷாவ்மியின் ரெட்மி நாளை (செப்டம்பர் 6 ஆம் தேதி) இந்தியாவில் Redmi 11 Prime 4G மற்றும் 5G மாடல்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதே நிகழ்வில், Redmi A1 Plus என்ற மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதை தனது டீஸர் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது. Xiaomi இந்த அறிவிப்பை அதன் சமூக வலைத்தள சேனல் மூலம் வெளியிட்டுள்ளது.
ஷாவ்மி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசரில் வரவிருக்கும் Redmi A1 Plus ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் ஒட்டுமொத்த தோற்றமும் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாக, Mi ஸ்டோரில் உள்ள மைக்ரோ சைட் இந்த போனின் விபரங்களை லைவ் செய்துள்ளது. இது Xiaomi Redmi A1 இன் சில முக்கிய சிறப்பம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது.
ஷாவ்மி அறிமுகம் செய்ய இருக்கும் Redmi A1 Plus ஸ்மார்ட்போனில் இருக்கும் அம்சங்களைப் பார்க்கலாம். ரெட்மி A1 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது MediaTek சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதை நிறுவனத்தின் மைக்ரோ சைட் வெளிப்படுத்துகிறது. ஆனால் எந்த சிப்செட் என்பதை Xiaomi நிறுவனம் அந்த சைடில் குறிப்பிட்டு பதிவிடவில்லை. ஆனால், முந்தைய பெஞ்ச்மார்க் தகவல், இது MediaTek Helio A22 சிப்செட் உடன் வெளிவரும் என்று பரிந்துரைக்கிறது.
புதிய ரெட்மி A1 பிளஸ் ஸ்மார்ட்போன் பச்சை, நீலம் மற்றும் கருப்பு ஆகிய மூன்று நிறத் தேர்வுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை ஷாவ்மியின் மைக்ரோ சைட் தெளிவாக வெளிப்படுத்துகிறது. இந்த மூன்று மாடல்களும் சிக்-லெதர் லுக் உடன் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த Redmi A1 Plus ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியைக் கொண்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெட்மி A1 பிளஸ் ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் வருகிறது. கூடவே இதில் டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ் வசதியும் இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே மற்றும் சிங்கிள் செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் HD+ குவாலிட்டி உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முழு HD+ டிஸ்பிளேவுடன் வராது என்று முந்தைய லீக் தகவல் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
புதிய ரெட்மி A1 பிளஸ் ஸ்மார்ட்போன் மற்ற Xiaomi சாதனங்களைப் போலவே வலது விளிம்பில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்களைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை வழங்காது என்று கருதுகிறோம். காரணம், மைக்ரோ சைட் தகவலில் உள்ள படங்களில் எங்கும் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை காண்பிக்கவில்லை. இந்த ரெட்மி A1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.9,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.






