ஒப்போ F21s pro உடன் பண்டிகையை கொண்டாடுங்கள்

இந்த வருடத்திற்கான பண்டிகை காலம் நெருங்கிவிட்டதைத் தொடர்ந்து, இப்போதே பல சலுகைகள் பற்றிய விபரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. குறிப்பாக, பண்டிகை காலத்தை முன்னிட்டு சில நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவும் திட்டம் தீட்டிவருகின்றன. அந்த வரிசையில், இப்போது OPPO நிறுவனம் OPPO F21s Pro என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது

சீன பிராண்ட்டான ஒப்போ, இந்த புதிய ஸ்மார்ட்போனின் டீஸர்களை சில சிறப்பம்ச தகவல்களுடன் வெளியிட்டுள்ளது. Oppo F21s Pro இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்ட Oppo F21 மற்றும் F21 Pro உடன் இணையும் புதிய மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு Oppo F19s அறிமுகப்படுத்தப்பட்டதையும் நாம் மறக்க முடியாது.

புதிய OPPO F21s Pro ஆனது Oppo F21 Pro போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், ஸ்டார்லைட் பிளாக் நிறத்துடன், கிலோவிங் டான்லைட் கோல்டு நிறத்தில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டான்லைட் கோல்ட் வண்ண வேரியண்ட் வெளிச்சத்தில் காண்பிக்கும் போது ஜொலிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒப்போ F21s ப்ரோ டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் திறன் உடன் வருகிறது. மேலும் இது பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

இந்த புதிய ஒப்போ F21s ப்ரோ ஸ்மார்ட்போனில் 2MP மைக்ரோஸ்கோபிக் லென்ஸ் மற்றும் 64MP பின்புற கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான Oppo F21 Pro ஆனது, 90Hz உடன் 6.43 அங்குல AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் வருகிறது. இந்த சாதனம் 8ஜிபி ரேம் உடன் கூடுதலாக 5ஜிபி வரை விரிவாக்கக்கூடியது விர்ச்சுவல் ரேம் உடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 33W (SUPERVOOC) சார்ஜ்ஜிங்கை ஆதரிக்கும் 4,500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. Oppo F21s Pro ஆனது Amazon India, நிறுவனத்தின் ஆன்லைன் பார்ட்னர்கள் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகளின் மூலம் கிடைக்கும். ஒப்போவிடமிருந்து மிக விரைவில் இந்த மொபைல் குறித்த முழு விவரங்களுடன் அறிமுக தேதி வெளியிடப்படும். கூடவே இதன் விற்பனை தேதியும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் பண்டிகையை முன்னிட்டு பல சிறந்த சலுகையும் மாபெரும் தள்ளுபடியை வழங்கும் என்பதனால் புது சாதனங்கள் வாங்க இது தான் சரியான நேரம். உங்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் அல்லது புதிய எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்க ஐடியா இருந்தால், இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையைத் தவறவிடாதீர்கள்.