Snapdragon 870 5G Chipset, 80W SuperDart Charge, Stainless Steel Vapor Cooling Plus டெக்னாலஜி என வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகி இருக்கிறது ரியல்மீயின் GT Neo 3T 5G மொபைல்.
ப்ராஸசர் & மெமரி
இந்த Realme GT Neo 3T 5G மொபைலில் 3.2Ghz CPU Clock Speed இருக்கும் Qualcomm Snapdragon 870 5G Chipset பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 8GB LPDDR4x வகை RAM மற்றும் UFS 3.1 வகை 256GB இண்டர்னல் மெமரியும் இதில் இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 12ன் மேல் ரியல்மி UI 3.0வில் கட்டமைக்கப்பட்ட இயங்குதளத்தில் இயங்குகிறது.
டிஸ்ப்ளே
120Hz refresh rate உடன் கூடிய AMOLED டிஸ்ப்ளே 1000Hz Instant Touch Sampling rate, மற்றும் 360Hz Touch sampling rate உடன் இருக்கிறது. இந்த மொபைல் 6.62 அங்குல, 1080 x 2400 Full HD+ திரையோடு 92.60% Screen-to-body Ratio-வில் வருகிறது. இது 397 PPI அடர்த்தியையும் 1300nits பிரகாசத்தையும் கொண்டு இருக்கிறது.
பேட்டரி
இந்த Realme GT Neo 3T 5G மொபைலில் 5000mAh பேட்டரியும் அதை சார்ஜ் செய்ய 80W SuperDart Charge வசதியும் இருக்கிறது. இதற்கான 11V/7.3A சார்ஜர் இதனோடு சேர்த்தே வழங்கப்படுகிறது. இந்த மொபைலில் Type C போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
கேமரா
F1.79 apeture உடைய 64 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 119 டிகிரி வரை எடுக்கக்கூடிய Wide-angel கேமரா, 4செமீ வரை சென்று எடுக்கக்கூடிய மேக்ரோ கேமரா என மூன்று கேமராக்கள் பின்பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபி எடுக்க முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கிறது.
அம்சங்கள்
Realme GT Neo 3T 5G மொபைல் 5G ஆதரவோடு வெளியாகி இருக்கும் இரட்டை சிம் வசதி கொண்ட மொபைல் ஆகும். இது Dash Yellow, Drifting White, Shade Black என மூன்று நிறத் தேர்வுகளில் வெளியாகி இருக்கிறது. இதில் Dolby Atmos Dual Speakerகள் உள்ளன. இதன் எடை 194.5 கிராம்
கனெக்டிவிட்டி
Face Unlock, In-display Fingerprint Unlock போன்ற ப்ரைவசி வசதிகளையும், GPS, GLONSS, BEIDOU, GALILEO, Bluetooth Version: 5.2, Multi-functional NFC போன்றவற்றையும் கொண்டு இருக்கிறது இந்த Realme GT Neo 3T 5G.
விலை
6GB RAM + 128GB Storage = ரூ.29,999
8GB RAM + 128GB Storage = ரூ.31,999
8GB RAM + 256GB Storage = ரூ.33,999








