இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 என்ற மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
Infinix Zero 5G 2023
இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 போனின் மாடல் எண் X6815C என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் பெயர் மாற்றப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த புதிய போன் MediaTek Dimensity சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்சங்கள்
இணையத்தில் கசிந்த தகவலின்படி இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 போனில் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு 4900 எம்ஏஎச் பேட்டரியானது 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வெளிவர இருக்கிறது. இந்த போன் 169x77x9mm என்ற அளவில் வெளியாக இருக்கிறது. இந்த ஜீரோ 5ஜி 2023 போன் பெயருக்கு ஏற்றபடி 5G மொபைலாக வெளியாகிறது. மேலும் இது டூயல் பேண்ட் wi-fi, ப்ளூடூத் 5, NFC போன்ற கனெக்டிவிட்டி வசதிகளோடும் வெளி வர இருக்கிறது.
இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி
கடந்த பிப்ரவரி மாதத்தில் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஜீரோ 5ஜி போன் வெளியானது. இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி போனில் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் இருக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஸ்பிளே
இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.78-அங்குல டிஸ்பிளேவைக் கொண்டு இருக்கிறது. கூடவே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 8ஜிபி ரேம் – 128 ஜிபி சேமிப்புத்திறன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.
பேட்டரி
இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. இதனால் சில நிமிடங்களில் மொபைல் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்.
கேமரா
இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 48எம்பி முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் ultra wide கேமரா, 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா உட்பட ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவோடு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது. இன்பினிக்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் அதிக வசதிகளைத் தருவதால், இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி போன் போலவே ஜீரோ 5ஜி 2023 போனுக்கும் அதிக எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது







