
Oppo நிறுவனம் சமீபத்தில் Oppo A17 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கிறது. Oppo A16 ஸ்மார்ட்போனின் வாரிசாக Oppo A17 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.56 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் சிப்செட், டூயல் ரியர் கேமரா, விர்ச்சுவல் ரேம் மற்றும் 5000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.
டிஸ்ப்ளே
Oppo A17 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் தனித்துவமான கேமரா வடிவமைப்போடு வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது லெதர் டெக்ஸ்ச்சர் ஃபினிஷ்-ஐக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்ஃபி கேமரா இடம்பெற்றிருக்கிறது. இந்த மொபைலில் HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.56 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 100 சதவீதம் DCI-P3 வண்ண வரம்பு ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
சிப்செட்
Oppo A17 ஸ்மார்ட்போனாது ஒப்போ ஏ16 போன்றே ஹீலியோ ஜி35 சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஒப்போ ஏ17 ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் இதன் சேமிப்பித்திறனை 1டிபி வரை விரிவாக்கம் செய்யலாம்.
கேமரா
Oppo A17 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் உடன் வருகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 5 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் இருக்கிறது. இந்த மொபைலில் IPX4 ஸ்பிளாஸ் எதிர்ப்பு, AI போர்ட்ரெய்ட், அல்ட்ரா-வால்யூம் மோட் மற்றும் மைக்ரோ USB போர்ட் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாக்ஸ் அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12.1.1 ஆதரவு இதில் இருக்கிறது.
விலை
Oppo A17 ஸ்மார்ட்போன் தற்போது மலேசிய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. Oppo A17 ஸ்மார்ட்போன் மலேசியாவில் RM599 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.10,611 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை மலேசியாவின் ஒப்போவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக வாங்கலாம். இது லேக் ப்ளூ (lake blue) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight black) வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. இந்தியா மற்றும் உலகளாவிய அறிமுகம் குறித்த அறிவிப்பை ஒப்போ நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
Microlens ஆதரவு
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஒப்போ எஃப்21எஸ் ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. Microlens ஆதரவு கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக Oppo F21s Pro Series வெளியாகி இருக்கிறது. Oppo F21s Pro தொடரில் 4ஜி மற்றும் 5ஜி ஆதரவு என்ற இரண்டு ஆப்ஷன் இருக்கிறது. Oppo F21s Pro ஆனது இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகமாகி இருக்கிறது. 15x மற்றும் 30x மேக்னிஃபிகேஷன் திறன் கொண்ட மைக்ரோ லென்ஸ் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. மைக்ரோலென்ஸ் ஆதரவோடு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.





