ரூ.15,000 பட்ஜெட்டில் சிறந்த 5G ஸ்மார்ட்போன்கள்

ரூ. 15,000 பட்ஜெட்டில் 5G ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், இந்த கட்டுரை உங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் தீபாவளி சிறப்பு விற்பனை நடந்துகொண்டிருப்பதால் சலுகை விலையில் சாம்சங் காலக்சி M13, ரெட்மீ நோட் 11T 5G, போகோ M4 போன்ற முன்னனி ஸ்மார்ட் போன்கள் என்று ரூ. 15,000 விலைக்குள் தரமான ஸ்மார்ட் போன்கள் உங்களுக்கு கிடைக்கின்றன. ரூ. 15,000 க்குள் கிடைக்கும் சிறந்த ஐந்து 5G ஸ்மார்ட் போன்கள் இதோ.

சாம்சங் கேலக்ஸி M13 5G (Samsung Galaxy M13 5G)

5000mAh பேட்டரி மற்றும் 6.5 அங்குல HD+ LCD டிஸ்பிளேயுடன் விற்பனையாகிக் கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி M13 5G ஸ்மார்ட் போன் அமேசானில் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றது. சாம்சங்கின் இந்த போன் Mediatek Dimensity 700 சிப்செட் மூலம் தயாராகி இருப்பதால் உபயோகிக்கும் போது சிறந்த அனுபவத்தைத் தருகிறது. இந்த Samsung Galaxy M13 5G இப்போது ரூ. 11,999 விலைக்கு அமேசானில் விற்பனையாகி வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் போன் 15W சார்ஜருடன் உங்களுக்குக் கிடைக்கிறது. அமேசானின் இந்த பண்டிகை விற்பனையில் அதிகம் விற்றது இந்தபோன் தான்.

ரெட்மீ நோட் 11T 5G (Redmi Note 11T 5G)

MediaTek Dimensity 810 சிப்செட் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ரெட்மீ ஸ்மார்ட் போன் மற்றொரு சிறந்த 5G போன் ஆகும். இது 6.6 அங்குல FHD+ டிஸ்பிளேவுடன் அதிக ரெசொலூஷன் மற்றும் Refresh rate கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 5000mAh பேட்டரி மற்றும் 33W சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. தரமான கேமரா மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கருடன் வரும் இந்த ரெட்மீ நோட் 11T 5Gயின் 64GB வேரியன்ட் Mi.com இணையதளத்தில் ரூ. 14,999 விலைக்கு விற்பனையாகிறது. ஆனால் அமேசானில் 128GB வேரியன்ட்டை கூப்பன் பயன்படுத்தி ரூ. 14,499 விலையில் வாங்கலாம்.

போகோ M4 5G (Poco M4 5G)

இந்த பட்டியலில் குறைந்தபட்ச விலையில் கிடைப்பது இந்த போகோ M4 5G ஸ்மார்ட் போன். குறைந்த விலையாக இருந்தாலும் MediaTek Dimensity 700 SoC சிப்செட்டில் உருவாக்கப்பட்டதால் சிறந்த அனுபவத்தைத் தருகிறது. 6.58 அங்குல FHD+ டிஸ்பிளேவுடன் வரும் இந்த ஸ்மார்ட் போனுடன் 5000mAh பேட்டரி மற்றும் 18 W சார்ஜரும் வழங்கப்படுகிறது. 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் கொண்ட போகோ M4 5G வேரியன்ட் பிளிப்கார்ட்டில் ரூ. 10,999 விலையில் விற்கப்படுகிறது.

iQOO Z6 லைட் 5G (iQOO Z6 Lite 5G)

Qualcomm Snapdragon 4 Gen 1 ப்ராசஸர் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த iQOO Z6 லைட் 5G 120Hz டிஸ்பிளேவடன் வருகிறது. மற்ற பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை போலவே இந்த iQOO Z6 லைட் 5G ஸ்மார்ட் போனும் 5000mAh பேட்டரி மற்றும் 18 W சார்ஜருடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் போனை கூப்பன் பயன்படுத்தி அமேசானில் ரூ. 12,749 விலைக்கு வாங்கலாம்.

ரியல்மி 9i 5G (Realme 9i)

இது புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட போன். இந்த ஸ்மார்ட்போன் Dimensity 810 சிப்செட் உடன் 6.6 அங்குல FHD+ மற்றும் 90Hz டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 5000mAh பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. குறைந்த விலையில் இந்த டிவைஸை வாங்க நினைத்தால் நீங்கள் நேரடியாக பிளிப்கார்ட் சென்று, வெறும் ரூ. 14,999 விலைக்கு இதை வாங்கலாம். வங்கி கார்டுகளுடன் சலுகையுடன் இது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.