ஒரு வழியாக பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை நடந்து முடிந்து இருக்கிறது. அதில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், வியரபில் ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ் பொருட்கள் போன்ற பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களின் மீது தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை Flipkart வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.
இந்த சலுகை விற்பனை மாத கடைசியில் வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மாதச் சம்பளக்கார்கள் சிலர் இந்த சலுகை விற்பனையை பயன்படுத்த முடியாமல் போய் இருக்கலாம். அதற்கென தற்போது பண்டிகைக் காலத்திற்கான மற்றொரு சிறப்பு விற்பனை குறித்து ப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது.
Big Dussehra Sale
இது பிளிப்கார்ட் பிக் தசரா விற்பனை (Flipkart Big Dussehra Sale) என்று அழைக்கப்படும். இந்த சிறப்பு விற்பனை இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்ற அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. பிளிப்கார்ட் பிக் தசரா விற்பனைக்கான தேதியையும் Flipkart இப்போது அறிவித்துள்ளது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கூடுதல் தள்ளுபடி
இந்த விற்பனையின் போது, எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல தயாரிப்புகளுக்குத் தள்ளுபடியை வழங்க இருக்கிறது. Flipkart மேலும் சில கூடுதல் சலுகைகளை வெளியிட்டுள்ளது, தசரா விற்பனையின் போது வாடிக்கையாளர்கள் HDFC கார்டு மூலம் வாங்கும் போது கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என்பதையும் அறிவித்துள்ளது.
4ம் தேதி கிடைக்கும்?
இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி பிக் தசரா விற்பனையை Flipkart தொடங்குகிறது. இது வரவிருக்கும் விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறும். இதில் Flipkart Plus வாடிக்கையாளர்கள் தங்கள் உறுப்பினர் சந்தாவை பயன்படுத்திக் கொள்ளலாம் கூடுதலாக அதிகாரப்பூர்வ விற்பனைக்கு ஒரு நாள் முன்னதாகவே பல்வேறு சலுகைகளை இவர்கள் அணுகலாம். பிளஸ் உறுப்பினர்களுக்கு, பிக் தசரா விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
80 சதவீதம் தள்ளுபடி?
இந்த சிறப்பு விற்பனையின் போது கிடைக்கும் சலுகைகளின் முழு விபரங்களை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. Flipkart வரவிருக்கும் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களில் என்ன சலுகைகளை வழங்கும் என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை. இருந்தபோதும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. தசரா விற்பனையின் போது ஸ்மார்ட் டிவி மற்றும் உபகரணங்கள் மீது 75 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கும்.
பிற சலுகைகள்
எச்டிஎஃப்சி வங்கி கார்டு வைத்திருப்பவர்கள் தசரா விற்பனையின் போது, கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது தவிர, வாடிக்கையாளர்கள் இப்போது buy now and pay later என்ற Flipkart Pay Later அம்சத்தை பயன்படுத்தலாம். பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது சுமார் ரூ. 50,000க்குக் குறைவான விலையில் iPhone 13 கிடைக்க வாய்ப்புள்ளது. சரி, எது எப்படியாக இருந்தாலும், Flipkart இன்னும் சில தினங்களில் இந்த சிறப்பு விற்பனையைத் துவங்கவுள்ளது என்பதனால், இந்த தேதிகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நடந்து முடிந்த சிறப்பு விற்பனையைத் தவற விட்டவர்களுக்கு இந்த தசரா விற்பனை ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.






