தற்போது நடைபெற்று வரும் இந்தியா மொபைல் காங்கிரஸ் 2022 (IMC) நிகழ்வில், இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான லாவா (Lava) பிளேஸ் (Blaze) தொடரின் கீழ் புதிய Lava Blaze 5G என்ற பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் இந்தியாவின் மிகவும் மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போனை மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
5G போன்
Lava நிறுவனம் அதன் Blaze வரிசையில் ஏற்கனவே Lava Blaze என்ற 4G ஸ்மார்ட்போனை கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்நிறுவனம் Lava Blaze Pro என்ற போனை அறிமுகப்படுத்தியது. இதுவும் 4G இணைப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட போன் ஆகும். இதற்கு அடுத்தபடியாக, Lava நிறுவனம் இப்போது, 5G மாடலை அறிமுகம் செய்கிறது. 5ஜி சேவைகள் இந்தியாவில் அறிமுகமாகும் இந்த தருணத்தில் Lava நிறுவனம் மலிவு விலையில் 5G போனை அறிவித்துள்ளது.
குறைந்த விலை 5G போன்
Lava Balze 5G என்ற இந்த ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு கிடைக்கும்? குறைந்த விலை என்றால், இது என்ன விலை வரம்பில் வருகிறது. இந்த புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? எல்லாவற்றையும் விரிவாகப் பார்க்கலாம். Lava Blaze 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெறும் ரூ. 10,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் 5ஜி சாதனம் இதுவாகும்.
ப்ரீ-புக்கிங் எப்போது ஆரம்பம்?
Lava Blaze 5G போன் ப்ளூ (நீலம்) மற்றும் க்ரீன் (பச்சை) நிறங்களில் வெளிவரும் என்று லாவா தெரிவித்துள்ளது. இந்த புதிய போன் தீபாவளிக்கு முன் ப்ரீ-புக்கிங் செய்யக் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில், மலிவு விலையில் புதிய 5ஜி நெட்வொர்க்கை அனுபவிக்கத் துடிக்கும் பயனர்களுக்கு இது ஒரு அற்புதமான சாய்ஸ் ஆக அமைகிறது. Lava Blaze 5G இன் சரியான விலை என்னவென்று தெரியவில்லை.
சிறப்பம்சம்
Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 1600 × 720 பிக்சல் கொண்ட 6.5 அங்குல HD+ LCD டிஸ்பிளே உடன் கிடைக்கிறது. இது 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடன் கூடிய 2.5D வளைந்த டிஸ்பிளேவுடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த புதிய ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 700 சிப்செட் உடன் வருகிறது. இது Redmi 11 Prime, Poco M4 5G மற்றும் பலவற்றில் உபயோகிக்கப்படும் சிப்செட் ஆகும். இத போன் 4ஜிபி ரேம் வசதியுடன் வருகிறது. இதில் இருக்கும் 4ஜிபி ரேம் தவிர, இந்த போனில் 3ஜிபி ரேம் கூடுதலாக விர்ச்சுவல் முறையில் கிடைக்கிறது. இதனால், இதன் ஒட்டுமொத்த ரேம் அளவு 7ஜிபி ஆக இருக்கும். இது 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. சேமிப்புத்திறனை இன்னும் அதிகரித்துக் கொள்ள இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டுக்கான ஆதரவும் இருக்கிறது.
கேமரா
இந்த Lava Blaze 5G போன் 50MP (f/1.8) பிரைமரி கேமராவுடன், டெப்த் சென்சார் மற்றும் மேக்ரோ கேமரா கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராவை கொண்டுள்ளது. வீடியோ கால் மற்றும் செல்ஃபிக்காக முன்பக்கத்தில் 8MP (f/2.0) செல்ஃபி கேமரா உள்ளது. இந்த மொபைல் ஒரு பெரிய 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த Lava Blaze 5G ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறதா இல்லையா என்பது பற்றிய விபரங்கள் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், Lava Blaze 5G சார்ஜ் செய்ய USB Type-C போர்ட் உடன் வருகிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இந்த சாதனம் 5G பேண்ட் ஆதரவு, 4G VoLTE, டூயல்-பேண்ட் Wi-Fi மற்றும் புளூடூத் 5.1 அம்சத்துடன் வருகிறது. மலிவு விலையில் 5ஜி போன் வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.






