விரைவில் வருகிறது ஐக்யூ நியோ 7

iQOO நிறுவனம் விரைவில் ஐக்யூ நியோ 7 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

iQoo Neo 7 ஸ்மார்ட்போன்

முதலில் இந்த போன் சீனாவில் அறிமுகமாகும என்றும், அதன்பின்பு இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த iQoo Neo 7 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கேமரா

Weibo தகவலின்படி, புதிய iQoo Neo 7 ஸ்மார்ட்போன் 50எம்பி Sony IMX766V பிரைமரி கேமரா + 12எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த ஸ்மார்ட்போன் 32எம்பி செல்ஃபி கேமராவுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்செட்

iQoo Neo 7 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 9000+ சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும் இந்த iQoo Neo 7 போன்.

அம்சங்கள்

6.78 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த iQoo Neo 7 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த iQoo Neo 7 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த iQoo Neo 6 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

iQoo Neo 6 ஸ்மார்ட்போன்

இந்த மொபைல் 6.6 அங்குல இ4 AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. இதோடு 1080×2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

சிப்செட்

ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி iQoo Neo 6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா

இந்த iQoo Neo 6 ஸ்மார்ட்போன் 64எம்பி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

பாஸ்ட் சார்ஜிங்

4700 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த iQoo Neo 6 ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.