பட்ஜெட் விலையில், Realme பிராண்டில் இருந்து கிடைக்கும் சிறந்த 4ஜி மற்றும் 5ஜி (realme 4G and 5G) ஸ்மார்ட்போன்களை தொகுத்துள்ளோம். இந்த போன்களை தற்போது சிறந்த சலுகை விலையில் குறைந்த விலையில் வாங்க முடியும். இந்த லிஸ்டில் மூன்று 4G போன்கள் மற்றும் மூன்று 5G போன்கள் இடம் பெற்றுள்ளன.
Realme narzo 50i (Mint Green, 2GB RAM+32GB Storage) – with No Cost EMI/Additional Exchange Offers
குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் ஒரு புதிய போனை 5ஜி இல்லாமல் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், தாராளமாக இந்த realme narzo 50i போனை நீங்கள் வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 7,999 என்றாலும் கூட, சலுகையின் மூலம் இதை நீங்கள் வெறும் ரூ.6,499 என்ற விலையில் வாங்கிட முடியும். இது 4G மாடலாகும்.
Realme narzo 50i Prime (Dark Blue 3 GB RAM +32 GB Storage) Octa-core Processor | 5000 mAh Battery
வாங்குகிற புது போனில் நல்ல அம்சங்கள் இருக்க வேண்டும், கட்டாயமாக போன் பார்ப்பதற்கு புதுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், இந்த realme narzo 50i Prime மாடலை தேர்வு செய்யலாம். இப்போது, இது வெறும் ரூ. 7,999 விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.8,999 ஆகும்.
realme narzo 50A (Oxygen Blue, 4GB RAM + 128GB Storage) – with No Cost EMI/Additional Exchange Offers
உங்கள் பட்ஜெட் வெறும் 10,000 ரூபாய் தான், ஆனால், இந்த விலைக்குள் 3 கேமரா இருக்க வேண்டும், ஸ்டோரேஜ் 128ஜிபி இருக்க வேண்டும், பேட்டரி குறைந்தது 6000mah ஆவது இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உடையவர்கள் இந்த realme narzo 50A மாடலை வாங்க வேண்டும். இதன் அசல் விலை ரூ. 13,999 என்றாலும் கூட, சலுகையில் இதை நாம் ரூ. 9,499 விலையில் வாங்கிடலாம்.
realme narzo 50 5G (Hyper Blue, 4GB RAM+128GB Storage) Dimensity 810 5G Processor | 48MP Ultra HD Camera
மிட்ரேஞ்ச் விலையில் சிறந்த 5G போனை வாங்க வேண்டும் என்றால், உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த realme narzo 50 5G மாடல் மட்டுமே. இதன் அசல் விலை ரூ. 18,999 ஆகும். Amazon சலுகையின் மூலம் இதை வெறும் ரூ. 15,999 என்ற விலையில் வாங்கிடலாம். realme இடமிருந்து கிடைக்கும் மலிவு விலை 5ஜி மாடல் இதுவாகும்.
realme 9 5G (Supersonic Black, 6GB RAM 128GB Storage)
5ஜி அம்சத்துடன் ஒரு ஆல் ரவுண்டர் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த realme 9 5G ஒரு அற்புதமான சாய்ஸ் ஆகும். இதன் அசல் விலை ரூ.21,000 -த்தை நெருங்குகிறது. ஆனால், சலுகையை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் வெறும் ரூ. 16,490 விலையில் இதை நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளலாம்.
realme Narzo 50 Pro 5G (Hyper Black 6GB RAM+128GB Storage) Dimensity 920 5G Processor |48MP Ultra HD Camera, Medium
ஸ்மார்ட்போன் என்று வந்து விட்டால், எப்போது உங்கள் கவனம் ப்ரோ மாடல்கள் மீது மட்டும் தான் இருக்கிறது என்றால், நீங்கள் தாராளமாக இந்த realme Narzo 50 Pro 5G மாடலை வாங்கலாம். காரணம், இது ப்ரோ மாடல் என்றாலும் கூட, இப்போது உங்களுக்கு பட்ஜெட் விலைக்கே கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 25,999 ஆகும். ஆனால், இதை இப்போது சலுகையுடன் வெறும் ரூ. 17,999 என்ற விலையில் நீங்கள் வாங்கிடலாம்.











