அறிமுகமானது புதிய பட்ஜெட் போன் நோக்கியா ஜி11 ப்ளஸ்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.

புது நோக்கியா ஜி11 பிளஸ் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 4 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி உட்பட பல வசதிகளைக் கொண்டிருக்கிறது.

டிஸ்ப்ளே

புதிய நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போனில் 720 x 1600 பிக்சல் அடர்த்தியில், 6.5 அங்குல IPS LCD HD திரை, வி நாட்ச் வடிவமைப்பில், 90Hz ரிப்ரெஷ் ரேட் உடன் வெளியாகி இருக்கிறது.

சிப்செட்

இது ஒரு 4ஜி மொபைல் ஆகும். இது இரட்டை சிம்களைக் கொண்டுள்ளது. இதில் யுனிசாக் டி606 பிராசஸர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஒரு ஆக்டா கோர் சிப்செட் ஆகும். இந்த மொபைல் 32GB – 3GB RAM, 64GB -3GB RAM, 64GB – 4GB RAM என மூன்று வேரியண்ட்களில் வெளிவருகிறது. இதன் சேமிப்புத்திறனை இன்னும் அதிகரித்துக் கொள்ள மைக்ரோ SD ஸ்லாட் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது.

இயங்குதளம்

இந்த நோக்கியா ஜி11 ப்ளஸ் மொபைலில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா

மொபைலின் பின்பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, மற்றும் 2MP டெப்த் கேமரா என இரண்டு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நார்டிக் டிசைன், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

பேட்டரி

இந்த போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரியும், 18 வாட் சார்ஜிங் வசதியும் இருக்கிறது. இதனால் நீண்ட நேர பயன்பாட்டுக்கு பிரச்சனை இருக்காது.

கனெக்டிவிட்டி

நோக்கியா ஜி11 மொபைல், WiFi, ப்ளூடூத் 5.0, 3.5mm ஆடியோ ஜாக், GPS, ஸ்பீக்கர், FM ரேடியோ, Type C போன்ற கனெக்டிவிட்டிகளைக் கொண்டிருக்கிறது. இந்த போன் Lake Blue, Charcoal Grey என இரு நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இதன் எடை 192 கிராம்

விலை

இதன் விலை ரூ. 12,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா மற்றும் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் இந்த மொபைலை வாங்க முடியும்.

அம்சங்கள்

  • 6.5 அங்குல 1600×720 பிக்சல் HD+ வி நாட்ச் டிஸ்ப்ளே
  • 90Hz ரிப்ரெஷ் ரேட்
  • 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் யுனிசாக் டி606 பிராசஸர்
  • மாலி ஜி57 MP1 GPU
  • 4 ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • டூயல் சிம் ஸ்லாட்
  • ஆண்ட்ராய்டு 12
  • 50MP பிரைமரி கேமரா
  • 2MP டெப்த் கேமரா
  • 8MP செல்பி கேமரா
  • 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
  • எப்எம் ரேடியோ
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
  • டூயல் 4ஜி வோல்ட்இ
  • வைபை, ப்ளூடூத் 5 யுஎஸ்பி டைப் சி
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி
  • 18 வாட் சார்ஜிங்