Tecno நிறுவனம் சமீபத்தில் டெக்னோ போவா 4 ப்ரோ (Tecno Pova 4 Pro) என்ற போனை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது இந்நிறுவனம் டெக்னோ போவா 4 (Tecno Pova 4) மாடலை நேற்று அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் எப்போ?
டெக்னோ அறிமுகம் செய்துள்ள டெக்னோ போவா 4 (Tecno Pova 4) சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யுமென்று தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்களை எப்போது அறிமுகம் செய்யும் மற்றும் எப்போது விற்பனையைத் துவங்கும் என்பதற்கான சரியான காலத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
அம்சங்கள்
இந்த புதிய டெக்னோ போவா 4 ஸ்மார்ட் போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது, இது எப்படி ப்ரோ (Tecno Pova 4 Pro) மாடலில் இருந்து வேறுபடுகிறது என்பது போன்ற விபரங்களைப் பார்க்கலாம். புதிய Tecno Pova 4 ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய ஒரே ஒரு வேரியண்ட்டாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சிறப்பம்சம்
இந்த புதிய Tecno Pova 4 ஸ்மார்ட்போன் 6.82 அங்குல IPS LCD HD+ ரெசொல்யூசன் உடன் கூடிய 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவுடன் வருகிறது. நாம் முன்பே பார்த்தது போல், இந்த போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்புத்திறன் உடன் வருகிறது. இந்த போனில் MediaTek Helio G99 சிப்செட் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜிபி விர்ட்சுவல் RAM வசதியையும் கொண்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
கேமரா & பேட்டரி
இது 8MP முன்பக்க செல்ஃபி கேமரா மற்றும் பின்பக்கத்தில் டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50 MP ப்ரைமரி கேமரா மற்றும் 2 MP டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். இந்த Tecno Pova 4 ஸ்மார்ட்போன் மிகப் பெரிய பேட்டரியுடன் வருகிறது. கூடவே, இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் இயங்கும் 6000mah பேட்டரியை கொண்டு இருக்கிறது. இந்த Tecno Pova 4 போனின் முக்கிய சிறப்பம்சமாக இதன் பேட்டரி பார்க்கப்படுகிறது.
கனெக்டிவிட்டி
இதில் சைடு மவுன்ட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், AI ஃபேஸ் அன்லாக் வசதியும் உள்ளது. ஆன்ட்ராய்டு 12 மூலம் வேலை செய்யும் இந்த ஸ்மார்ட்போன், டூயல் சிம் கார்ட் ஸ்லாட், 4G, டுயல் பேண்ட் வை-ஃபை, ப்ளூ டூத், GNSS, NFC, 3.5 mm ஹெட்போன் ஜாக், டைப் சி USB ஆகிய கூடிதல் அம்சங்களுடன் வருகிறது.
விலை
இந்த Tecno Pova 4 ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 17,800 என்ற விலையில் வருகிறது. இந்த புதிய டெக்னோ போவா 4 ஸ்மார்ட்போன் க்ரேய் (சாம்பல்) மற்றும் ப்ளூ (நீலம்) நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வரும்போது இந்த ஸ்மார்ட்போன் சில மாற்றங்களைப் பெறுமா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பட்ஜெட் விலையில் இப்போது 5ஜி போன்களே கிடைக்கும் பொழுது டெக்னோவின் இந்த 4ஜி போன் என்ன வரவேற்பை பெரும் என்பதைப் பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.






