நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அது தற்போது அதன் பெரும்பாலான மக்கள் மிகவும் எதிர்பார்த்த ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. மேலும் அது வருகிற நவம்பர் 3 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது!
பேஸிக் வித் ஆட்ஸ் (Basic with Ads)
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், அதன் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. பேஸிக் வித் ஆட்ஸ் (Basic with Ads) என்று அழைக்கப்படும் இந்த புதிய திட்டம், நவம்பர் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இது “விளம்பரங்களுடன் வரும்” நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் முதல் திட்டம் ஆகும். தற்போது வரை நெட்ஃபிளிக்ஸ் திட்டங்கள் எல்லாமே விளம்பரங்கள் இல்லாத திட்டங்கள் ஆகும்!
புதிய திட்டம்
இந்த புதிய Basic with Ads திட்டம் ஆனது, ஏற்கனவே கிடைக்கும் Basic திட்டத்தை போலவே 720p/HD வரையிலான வீடியோ தரத்தை வழங்கும். விளம்பரங்களை பொறுத்தவரை, சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 4 முதல் 5 நிமிடங்கள் வரையிலான விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும் என்று நெட்ஃபிளிக்ஸ் கூறுகிறது; மேலும் இந்த விளம்பரங்கள் 15 அல்லது 30 வினாடிகள் வரை நீளும் என்பதையும் நெட்ஃபிளிக்ஸ் குறிப்பிட்டுள்ளது!
இதெல்லாம் இருக்காது
மற்ற எல்லா ஸ்ட்ரீமிங் தளங்களை போலவும், இதுவும் நாடுகள் மற்றும் பயனர்களின் விருப்பங்களை அடிப்படையாக கொண்ட விளம்பரங்களையே வழங்கும். இந்த திட்டத்தில் விளம்பரங்கள் மட்டுமே ஒரு பிரச்சனையாக இருக்காது. நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் ஒரு பிளாக் போஸ்ட்டின் படி, லைசன்ஸ் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த திட்டத்தின் (பேஸிக் வித் ஆட்ஸ்) கீழ் குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் அணுக கிடைக்காது மற்றும் டைட்டில்களை டவுன்லோட் செய்யும் திறனும் இருக்காது!
விலை
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த திட்டத்தில் வேலை செய்து வருகிறது. இந்த திட்டத்தின் விலை நிர்ணயம் – மாதத்திற்கு $6.99 ஆகும், அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 575 ஆகும். இந்த புதிய திட்டமானது, விளம்பரம் இல்லாத மற்ற திட்டங்களை பாதிக்காது என்றும் நெட்ஃபிளிக்ஸ் உறுதியளித்துள்ளது. அதாவது பேஸிக், ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம் திட்டங்கள் ஆனது தொடர்ந்து கிடைக்கும் மற்றும் அவைகள் விளம்பரமில்லாத திட்டங்களாகவே இருக்கும்!
இந்தியாவுக்கு எப்போது?
நெட்ஃபிளிக்ஸின் இந்த புதிய “பேசிக் வித் ஆட்ஸ்” திட்டமானது, தற்போது வரையிலாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இத்திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா? அறிமுகமாகும் பட்சத்தில் அது எப்போது நடக்கும்? என்கிற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை! பொறுத்து இருந்து பார்க்கலாம்.






