இந்தியா வருகிறது MG ஹட்ச்பேக் எலக்ட்ரிக் கார்

குறைந்த விலை எலக்ட்ரிக் காரான டாடா டியாகோ EV மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், எம்ஜி நிறுவனம் காம்பேக்ட் எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

புதிய எலெக்ட்ரிக் கார் கொண்டு விலை அடிப்படையில் போட்டியை ஏற்படுத்தும் திட்டம் இல்லை என எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் எம்ஜி சிட்டி EV என அழைக்கப்படலாம். 2023 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்த எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இதைத் தொடர்ந்து எம்ஜி சிட்டி EV மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஏற்கனவே ஆசிய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் வுலிங் ஏர் EV மாடலில் மாற்றங்கள் செய்யப்பட்ட காராக இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சாலைகளில் எம்ஜி சிட்டி EV சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் புதிய சிட்டி EV மாடல் ஏராளமான மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

இந்தியாவில் டாடா டியாகோ EV மாடலை போன்றே எம்ஜி சிட்டி EV நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. எனினும், விலையை பொருத்தவரை எம்ஜி சிட்டி EV டாடா காருக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படாது. எம்ஜி மோட்டார் இந்திய தலைவர மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சப்பா பயணிகள் வாகன பிரிவில் குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.

சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டி ஐந்து கதவுகள் கொண்ட அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யுவி-யை இந்தியாவில் சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த கார் யூரோ என்கேப் கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று இருக்கிறது. இந்த முடிவுகள் வலதுபுறம் மற்றும் இடதுபுற டிரைவ் கொண்ட இரு வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

குளோபல் என்கேப் போன்றே யூரோ என்கேப் அட்டோ 3 காரின் பேஸ் வேரியண்டை சோதனை செய்தது. இந்த காரில் ஏழு ஏர்பேக், சீட் பெல்ட் பிரிடென்ஷனர்கள், ஐசோபிக்ஸ் ஆன்க்கர், ADAS அம்சங்களான ஆட்டோனோமஸ் எமர்ஜன்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. அனைத்து அம்சங்களும் இந்திய மாடலிலும் உள்ளது.

பெரியவர்கள் பயணிக்கும் பிரிவில் அட்டோ 3 மாடல் 91 சதவீத புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த கார் 38-இல் 34.7 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த கார் ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி இருக்கிறது. பக்கவாட்டு டெஸ்டிங்கிலும் அதிக புள்ளிகளை அட்டோ 3 பெற்றுள்ளது. குழந்தைகள் பயணிக்கும் போது எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் அனைத்து விட டெஸ்டிங்கிலும் அதிக புள்ளிகளை பெற்று இருக்கிறது. ஆறு வயது முதல் பத்து வயதுடைய குழந்தைகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும் என கிராஷ் டெஸ்டிங்கில் உறுதியாகி இருக்கிறது. மொத்தத்தில் இந்த கார் 49-க்கு 44 புள்ளிகளை பெற்றுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.