விவோவின் V25 சீரிஸில் 4G போன் வருகிறதா?

விவோ (Vivo) நிறுவனம் சமீபத்தில் வி25 என்ற ஸீரிசை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸீரிசில் வி25 5ஜி என்ற வேரியண்டை ரூ. 27,999 மற்றும் வி25 ப்ரோ 5ஜி என்ற வேரியண்டை ரூ. 35,999-க்கும் விற்பனை செய்து வருகிறது. இவ்விரண்டையும் தொடர்ந்து இந்த வி25 ஸீரிசில் மற்றுமொரு வேரியண்டை விவோ (Vivo V25 4G) இந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் அறிமுகமாகிறதா V25 4G?

விவோ வி25 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட் போன்களில் இருக்கும் அதே வசதிகளுடன் கூடிய புதிய 4ஜி போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த விவோ வி25 4ஜி (Vivo V25 4G) ஸ்மார்ட்போனின் விவரங்கள் பற்றியும் எப்போது அறிமுகம் ஆகலாம் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

அறிமுகம் எப்போது?

இந்த விவோ வி25 ஸீரிலில் இதற்கு முன்னர் வெளியான ஒரு 4ஜி வேரியண்டான வி25இ 4ஜி-யின் அம்சங்களைப் போலத் தான் இந்த புது வி25 4ஜி வேரியண்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன எதிர்பார்க்கலாம்?

இந்த விவோ வி25இ 4ஜி ஸ்மார்ட் போன் தற்போது தாய்லாந்தில் விற்பனையாகி வருகிறது. மேலும் இந்த விவோ வி25 4ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் மாதத்தின் மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், விவோ நிறுவனத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விவோ வி25 4ஜி ஸ்மார்ட்போனில் என்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்பதை இப்போது பார்க்கலாம்.

சிப்செட்

இந்த விவோ வி25 4ஜி டிவைஸ் ஆனது 4ஜி ரக ஸ்மார்ட்போன் என்பதால் MediaTek Helio G99 சிப்செட் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் MediaTek அல்லது Qualcomm புதிதாக எந்த சிப் செட்டும் அறிமுகம் செய்யாததால் Helio G99 SoC பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கேமராவைப் பொருத்தவரை, V25e 4ஜி டிவைஸில் இருக்கும் அதே அம்சங்களே இதிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே & கேமரா

இந்த ஸ்மார்ட் போனில் 64எம்பி முதன்மைக் கேமரா, 2எம்பி மாக்ரோ சென்சார் மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் என்று பின்புறம் மூன்று கேமரா செட்டப் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், செல்ஃபிகள் எடுப்பதற்கு ஏதுவாக முன்பக்கத்தில் 32எம்பி கேமரா இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது 6.44 அங்குல FHD+ மற்றும் 90 Hz ரெப்ரெஷ் ரேட் டிஸ்பிளே அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் செல்ஃபி கேமராவிற்கென்று வாட்டர் ட்ராப் நாட்ச் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரி

மேலும் டிஸ்ப்ளேவிலேயே கை ரேகை ஸ்கேன் செய்யும் வசதியும் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் இன்டர்னல் ஸ்டோரேஜ் 128 ஜிபி ஆகும். மேலும் மைக்ரோ SD கார்ட் மூலம் 1டிபி வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். கூடவே இந்த ஸ்மார்ட் போன் 44W வேகத்தில் சார்ஜ் ஆகக்கூடிய 4500 mAh பேட்டரியுடன் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

விலை?

மேலே கூறப்பட்ட அம்சங்களை வைத்து பார்க்கும்போது, இந்த விவோ வி25 4ஜி ஸ்மார்ட் போன் ரூ. 20,000-த்திற்குள் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி வசதி இல்லாத ஸ்மார்ட் போன்கள் 20,000 ரூபாய்க்கு இந்தியாவில் பெரும்பாலும் விற்கப்படுவது இல்லை. எனவே இந்திய சந்தையில் இந்த விவோ வி25 4ஜி யின் விற்பனை எப்படி இருக்கும் என்பதை பொருத்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் விவோ நிறுவனத்தின் தரப்பில் இருந்து இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம், அம்சங்கள், விலை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இப்போது வரை வரவில்லை.