குறைந்த விலை 5ஜி போனை அறிமுகம் செய்தது லாவா!

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா (Lava) புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் குறைந்த விலையில் வெளிவந்துள்ளது. அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Lava Blaze 5G ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டு இருக்கிறது. அறிமுக சலுகையாக இந்த போன் ரூ.9,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு குறைந்த விலையில் இதுவரை எந்த 5ஜி போனும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனை

இருந்தபோதிலும் Lava Blaze 5G போனின் விற்பனை தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் விற்பனை தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது Lava Blaze 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சிப்செட்

Lava Blaze 5G ஸ்மார்ட்போன் ஆனது கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் கிரீன் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் 7என்எம் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

ஸ்டோரேஜ்

அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லாவா 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது. இது தவிர விர்சுவல் ரேம் வசதியின் மூலம் 3 ஜிபி வரை இதன் ரேம் மெமரியை அதிகரித்துக் கொள்ள முடியும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியும் கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

டிஸ்பிளே

புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 6.51 அங்குல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 720 x 1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு அறிமுகமாகி இருக்கிறது இந்த லாவா ப்ளேஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.

கேமரா

இதன் பின்புறத்தில் 50 மெகா பிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 8எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

பேட்டரி

புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ்அன்லாக் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி

5ஜி, புளூடூத் வி5.1, 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை 802.11, ஜிபிஆர்எஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லாவா ஸ்மார்ட்போன். அதேபோல் GIF, HDR, மேக்ரோ, மோஷன், நைட், பனோரமா, போர்ட்ரெய்ட், ஸ்லோ மோஷன் டைம்லேப்ஸ் போன்ற கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.